இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடன ஆளுமையால் கவர்ந்தவர் பிரபுதேவா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களை கற்று தேர்ந்த பிரபுதேவா திரையில் கூட்டத்தில் ஒருவராக நடன கலைஞராக தோன்றினார். நடன இயக்குநராக இருந்த போதிலும் அவரின் முகம் ஒரு நடன கலைஞராக அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பதிந்து போனது. அன்று முதல் இன்று வரை இந்திய அளவில் நடனம் என்றால் பிரபு தேவா தான் எனும் அளவிற்கு ஒரு பெஞ்ச் மார்க் செட் செய்தவர் பிரபுதேவா.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்:
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்பட்ட பிரபு தேவா ஒரு நடிகராக, இயக்குநராகவும் தடம் பதித்தார். இந்து, ஜென்டில்மேன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி.ஐ.பி, உள்ளம் கொள்ளை போகுதே, அள்ளித்தந்த வானம், சார்லி சாப்ளின் என ஏராளமான படங்களில் நடித்தார்.
விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி சங்கர்தாதா எம்பிபிஎஸ், வில்லு, தபாங் 3, எங்கேயும் காதல் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கி இளைஞர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணிக்கும் ஒரு தவிர்க்க முடியாத கலைஞனாக திகழ்ந்து வருகிறார் பிரபுதேவா. அவரின் நடனத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் கிரேஸ் அதிகம்.
குலேபகாவலி:
அந்த வகையில் 2011ம் ஆண்டு கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கல்யாண் இயக்கிய நகைச்சுவை திரைப்படம் 'குலேபகாவலி'. பிரபு தேவா, ஹன்சிகா மோத்வானி , ரேவதி, ஆனந்த்ராஜ், யோகி பாபு, ராமதாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். விவேக் - மெர்வின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 'குலேபா...' பாடலை அனிருத் ரவிச்சந்தர், மெர்வின் சாலமன் இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலில் பிரபுதேவாவின் அசத்தலான நடனம் அனைவரின் கவனம் பெற்றது.
சோசியல் மீடியா எங்கும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தினார். மிகவும் நளினமான இந்த ஸ்டெப்ஸ் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்த பாடலுக்கு நடன கலைஞர்களுடன் ரிஹர்சல் செய்யும் சமயத்தில் எடுக்கப்பட்ட த்ரோபேக் வீடியோ ஒன்றை தற்போது பிரபுதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.