ஏ ஆர்  ரஹ்மான் பிரபுதேவா கூட்டணி


90களில் நடனமும் பாட்டும் என திரையுலகை கலக்கியவர்கள் பிரபுதேவா மற்றும் ஏ ஆர் ரஹ்மான். இருவரும் இதுவரை ஆறு முறை சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். சிக்கு புக்கு ரயிலே, பேட்ட ராப் , ஊர்வசி , முக்காபுலா, வெண்ணிலவே வெண்ணிலவே என இருவரின் காம்போவில் வந்த பாடல்களுக்கு இன்று வரை ரசிகர்கள் ஆட்டம் போட்டு வருகிறார்கள். தற்போது கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு முறை இந்த கூட்டணி இணைந்துள்ளது.


மூன் வாக்






பிஹைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ரஹ்மான் இசையமைக்க பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. மைக்கல் ஜாக்சனின் புகழ்பெற்ற ஸ்டெப் 'மூன் வாக் ' தான் இப்படத்தின் டைட்டில். 


கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி கடந்த மே மாதம் படப்பிடிப்பு துவங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டைட்டில் வெளியிடப் பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


இந்த இருவரின் கூட்டணியில் இந்த முறை எந்த மாதிரியான பாடல்கள் உருவாகப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். சமீப காலங்களில் பிரபுதேவாவின் நடனத்தை ரசிகர்கள் பெரிதாக படங்களில்  பார்க்கவில்லை. அவ்வப்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்துபோய் தரிசனம் கொடுத்து வருகிறார் பிரபுதேவா. ஆனால் ரசிகர்கள் அவரை நல்ல கமர்ஷியல் படத்தில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன. அந்த குறையை இந்த புதுப் படம் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




மேலும் படிக்கThankar Bachan: உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு..நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் கடுப்பான தங்கர்பச்சான்!


Vignesh Shivan :தந்தையாக இருப்பது எப்படியானது? ஓவியத்தைப் பார்த்து எமோஷ்னலாகிய விக்னேஷ் சிவன்...