பிரபாஸ்
ரசிகர்களால் செல்லமாக டாலிங் என்றும் ரிபல் ஸ்டார் என்றும் அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பாகுபலி , சாஹோ , சலார் , கல்கி என தொடர்ச்சியாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அறிந்த ஸ்டாராக வலம் வருகிறார். பிரபாஸ் படங்களுக்கு மொழிகள் கடந்து ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். பெரிய பெரிய ஸ்டார்களின் பட வசூலுக்கு இவர் படங்கள் சவால் விடுகின்றன.
பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவர் நடித்து வரும் த ராஜா சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை மாருதி இயக்குகிறார். தமன் இப்படாத்திற்கு இசையமைக்கிறார்.