கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , கருணாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 


கங்குவா படத்தின் கதை


கங்குவா படத்தின் கதைப்பற்றி எந்த தகவலும் கசிந்துவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறது படக்குழு . இந்த படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்காலம் , கடந்தகாலம் என இரு காலத்தில் நடக்கும் கதைகள் ஒரு சுவாரஸ்யமான வகையில் இந்த படத்தில் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த இரு கதைகளை ஒன்று சேர்க்கும் அந்த அம்சம் புதுவிதமான ஒரு அனுபவமாக இருக்கும் என படத்தின் இயக்குநர்  தெரிவித்துள்ளார் . சூர்யா வரலாற்று காட்சிகளில் கங்குவாவாகவும் தற்கால காட்சிகளில் பிரான்சிஸ் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் திஷா பதானி , ரெடின் கிங்ஸ்லி , யோகி பாபு உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் கங்குவா படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த பாடல் குறித்து பேசிய சிறுத்தை சிவா சுவாரஸ்யமான ஒரு தகவல் பகிர்ந்துகொண்டுள்ளார்.


கங்குவா படத்தில் அனிருத்


முழுக்க முழுக்க இன்றைய தலைமுறையினர் வைப் செய்யும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளதாகவும் இதில் யோகி பாபு , திஷா பதானி , ரெடின் கிங்ஸ்லி , அனிருத் ரவிச்சந்தர் ஆகியவர்கள் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கங்குவா படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது இதுவரை வெளிவராத தகவல். இந்த தகவலை சிறுத்தை சிவா தற்போது ரிவீல் செய்துள்ளார். ஏற்கனவே விஜய் , ரஜினி , சிவகார்த்திகேயன் , தனுஷ் ஆகியவர்களின் படத்தில் அனிருத் கேமியோ செய்திருக்கிறார். சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது கங்குவா படத்தில் அனிருத் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் மாதிரிதான்.