பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான  நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் டீசர் சாதனை ஒன்றை படைத்துள்ளது. 


கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபாஸ்,  ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.  இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக சலார் படம் கேஜிஎஃப் படத்தின் தொடர்புடைய படமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகின. இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேசமயம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி சலார் படத்தின் டீசர் அதிகாலை 5.12 மணிக்கு  வெளியானது. திகாலை நேரத்தில் டீசர் வெளியாகிறது என பலரும் கேள்வியெழுப்பினர். 


மேலும் கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ யஷ் கப்பலை ஓட்டிக் கொண்டு இருக்கும்போது அருகிலுள்ள கடிகாரத்தில் அதிகாலை 5 மணி என இருக்கும். இதனால் சலார் படம் கேஜிஎஃப் படத்தின் தொடர்ச்சி தான் என ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். இதனிடையே சலார் படத்தின் டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இது 100 மில்லியன் (ஒரு கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. 






இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நன்றியில் திளைத்திருக்கிறோம். இந்திய சினிமாவின் ஹீரோயிச பிம்பத்திற்கு அடையாளமாக திகழும் சலார் புரட்சியில் ஒன்றிணைந்த உங்கள் ஒவ்வொரிடமிருந்து எங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்திய திரைப்படமான சலார் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. உங்களின் அசைக்க முடியாத அதாரவு எங்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.