பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வெளியாக இருக்கும் ராதே ஷியாம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஜனவரி 14-ஆம் தேதி  படம் வெளியிடப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாதம் ஜூலை 30-ஆம் தேதி படம் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக படம் வெளியிட  தாமதமானது.




தயாரிப்பாளர்கள் தங்களின்  ட்விட்டர் பக்கத்தில்  பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர் . புது ஆண்டு , புது தொடக்கம் , திரையரங்குகளில்  வெளியாக இருக்கிறது " ராதே ஷியாம் " என்று பதிவிட்டு இருந்தனர் .





படத்தின் நாயகன் பிரபாஸும் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் "உங்கள் அனைவரையும் சந்திக்க எனது காதல் கதையுடன் ஜனவரி 14 அன்று வருகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார் .





ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்து வெளிவர இருக்கும் திரைப்படம்  ராதே ஷ்யாம் . இந்த திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது . முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி இன்று வரையிலும் ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாவே இருந்து வருகிறது . இன்று படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட பிறகு இணையத்தில் மிக வைரலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது " ராதே ஷ்யாம்" பிரபாஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே . முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்க கூடுமா அல்லது மசாலா நிறைந்த படமாக இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது . சச்சின் கெடேகர், பிரியதர்ஷி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, முர்லி சர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா சேத்ரி மற்றும் சத்யான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.




டி-சீரிஸ் படத்தை வழங்குகிறது . தென்னிந்திய மொழிகளுக்கான இசையமைப்பை ஜஸ்டின் பிரபாகரன் கையாளுகிறார் மற்றும் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இது இந்தியில் மட்டுமல்ல, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியிடப்பட உள்ளது .




மகேஷ் பாபுவின் சர்காரு வரி பாட்டா மற்றும் பவன் கல்யாண்-ராணா டகுபதி படமும் சங்கராந்தி சீசனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி தியேட்டர்களில் அனல் தெறிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .