Kamal In Project K: பிரபாஸ் உடன் கைகோர்த்த கமல்ஹாசன் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் உருவாகும் ப்ராஜெக்ட் கே..!

Kamal Haasan in Prabhas Project K: பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ”ப்ராஜெக்ட் கே” படத்தில், கமல்ஹாசன் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ”ப்ராஜெக்ட் கே”(Project K) படத்தில், கமல்ஹாசன்(Kamal Haasan) நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

படக்குழு அறிவிப்பு:

படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உலக நாயகன் கமல்ஹாசனை எங்களது படத்திற்கு வரவேற்கிறோம். இதன் மூலம் தங்களது படம் தற்போது உலகளாவிய படமாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. அதோடு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் “உலகையே முழுமையாக மூடி மறைக்கும் அளவிற்கு நிழலை கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அப்படிபட்ட ஒருவர் தான் இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட பொருட்செலவில் ”ப்ராஜெக்ட் கே” :

வைஜெயந்தி  மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மஹாநடி மற்றும் ஜாதி ரத்னாலு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). பிரபாஸ் நடிக்கும் இந்த பான் இந்தியா திரைப்படத்தின் மூலம்  தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை தீபிகா படுகோனே (Deepika Padukone). மேலும் இப்படத்தில் திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய இந்திய திரைநட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமா கண்டிராத பிரமாண்டம் :

இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரம்மாண்டமான படமாக 'ப்ரொஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் கொரோனா காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியன் படமாக உருவாக வருகிறது. அதிரடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகும் இப்படத்தை, ஆங்கிலம் உட்பட மற்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

வில்லனாகும் கமல்:

இந்நிலையில் தான், மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், வில்லனாக நடிப்பதாக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ள 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் அவர் அப்படத்தில் ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் மூலம் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் உடன் திரையை பகிர உள்ளார் உலகநாயகன் என்பது திரை ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

உற்சாகத்தில் ரசிகர்கள் :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'இந்தியன் 2' படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் மணிரத்னம் இயக்கும் KH234 படத்தில் இணைய  உள்ளார். அரசியலை தாண்டி உலகநாயகன் மீண்டும் சினிமாவில் கலக்கி வருவது அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

Continues below advertisement