Salaar OTT Release: பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான, சலார் திரைப்படம் ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் நாளை வெளியாக உள்ளது.
சலார் ஒடிடி ரிலீஸ்:
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சலார்' திரைப்படம், இன்னும் சில மணி நேரங்களில் OTTயில் வெளியாக உள்ளது. பிரபல OTT இயங்குதளமான Netflix, திரையரங்குகளுக்குப் பதிலாக OTTயில் சலார் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புபவர்களுக்குமான நற்செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை அதாவது இன்று நள்ளிரவு முதல் சலார் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. தெலுங்கு மட்டுமின்றி, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என Netflix OTT தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் வெளியான 28 நாட்களுக்குப் பிறகு, சலார் திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுமார் 160 கோடி ரூபாய்க்கு, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.600+ கோடி வசூல்:
பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில், கே.ஜி.எஃப். படத்தின் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி சலார் படம் வெளியானது. ஹொம்பாலே நிறுவனம் தயாரித்த இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலுமே பிரபாஸின் முந்தைய படங்களை விட நன்றாகவே இருக்கிறது என கூறப்பட்டது. இதையடுத்து இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. பொங்கலையோட்டி பல படங்கள் வெளியான பிறகும், ஆந்திரா உள்ளிட்ட சில பகுதிகளில் கணிசமான திரையரங்குகளில் சலார் திரைப்படம் இன்னுமும் ஓடிக்கொண்டு இருக்கிறது. பிரசாந்த் நீல் தான் ஏற்கனவே கன்னடத்தில் தான் எடுத்த உக்ரம் படத்தின் கதையை, பிரபாஸை மையமாக வைத்து இன்னும் பிரமாண்டமாக்கி பெரும் பொருட் செலவில் உருவான படம் தான் சலார். இதில், மீனாட்சி சௌத்ரி, ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களை பெற்றாலுமே, வெளியான 2 நாட்களில் உலகளவில் சுமார் 300 கோடி வசூலித்ததாக் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேநேரம், 3 ஆண்டுகள் வெளிப்படுத்திய கடின உழைப்பிற்கான பரிசு தான் படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு என படக்குழு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், அதன் வெளியீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.