பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்தது. இவரை வைத்து ரூ.500 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டுகளில் பிரமாண்ட படங்கள் உருவாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பிரபாசுக்கு ரசிகர்கள் உருவானதால் அவரது படங்களை பான் இந்தியா படங்களாக எடுத்து வெளியிடுகின்றனர். ராமாயண கதையை மையமாக வைத்து தயராகி அண்மையில் திரைக்கு வந்துள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்த பிரபாஸ் தோற்றத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் கிராபிக்ஸ் மிக மோசமாக உள்ளதாகவும் படத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  இவற்றை எல்லாம் மீறி ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இவர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.


இந்த நிலையில் பிரபாஸ் சம்பாதிக்கும் பணத்தை வைத்து வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவிப்பதாகவும் இத்தாலியில் பல கோடிகள் கொடுத்து சொகுசு வில்லா ஒன்றை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜெட் விமானத்தில் தனது நண்பர்களுடன் இத்தாலி சென்று அந்த சொகுசு குடியிருப்பு பங்களாவில் ஓய்வு எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தாலியில் உள்ள வில்லாவை சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு வாடகைக்கு விடுவதாகவும் இதன் மூலம் அவருக்கு மாத வாடகையாக ரூ.40 லட்சம் வருவதாகவும் சொல்லப்படுகிறது.


பாகுபலி 2 திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகி ரூ. 1,810 கோடி வசூல் செய்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாகுபலி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் நடிகர் பிரபாஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து தொடர்ந்து பான் இந்தியா அளவில் இவரின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதன் பிறகு வெளியான சாஹோ மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டு திரைபடங்களுமே பிரபாசுக்கு கைக்கொடுக்கவில்லை. இருந்த போதிலும் ஆதிபுருஷ் திரைப்படம் இதுவரை ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் ரீதியாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.