Prabas: ரிலீஸ் ஜனவரியில் ஆனால் இன்றே 250 ருபாய் வசூல் - பிரபாஸின் ஆதிபுருஷ் 


பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து சூப் டூப்பர் ஹிட் படத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வலையில் சிக்க வைத்த பிரபாஸ் மார்க்கெட் பல மடங்கு எகிறி சம்பளமும் 100 கோடியாக உயர்ந்தது. தென்னிந்திய சினிமாவே அவரை கொண்டாடி வந்த நிலையில் ராதே ஷ்யாம் மற்றும் சஹோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். எதிர்பார்த்த அளவு அப்படங்கள் வெற்றியையும் வரவேற்பையும் கொடுக்கவில்லை. மேலும் வசூல் ரீதியாகவும் சரியான அடி வாங்கின. 


பெரிய பட்ஜெட் படம் :


பிரபாஸ் அந்த தோல்விகளால் துவண்டு போகாமல் மற்றுமொரு காவிய கதையில் நடித்து வருகிறார். ஓம் ராத் இயக்கத்தில், டி சீரிஸ் நிறுவனத்தின் சார்பில் பூஷன் குமார், க்ரிஷான் குமார் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் 500 கோடி ரூபாய் செலவில் அதிபுருஷ் என்ற திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் பேன் இந்திய திரைப்படமாகும். ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், இராவணன் கதாபாத்திரத்தில் சயீப் அலிகான் மற்றும் சீதா கதாபாத்திரத்தில் கிருத்தி சனோன் நடித்து வருகின்றனர். 


 



இரண்டம் பாகம் :


ஆதிபுருஷ் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் வெளியானவுடன் இரண்டம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கிவிடும் என்று திட்டமிட்டுள்ளார் பட குழுவினர். இரண்டம் பாகத்திலும் பிரபாஸ் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார் என தகவல்கள் கூறுகின்றன. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



செம்ம வசூல் :


ஆதிபுருஷ் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு வாங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றில் இது வரையில் எந்த ஒரு படமும் இந்த அளவிற்கு விலை போனதில்லை என ஒட்டுமொத்த திரைதுறையினரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 


ஜனவரி வெளியீடு: 


இந்த திரைப்படம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து வருவதால் வில் வித்தை பயிற்சிகளை எடுத்துள்ளார். ஹைத்ராபாத்    மற்றும் மும்பையில் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது.


நடிகர் பிரபாஸ்க்கு இந்த ஆதிபுருஷ் திரைப்படம் நிச்சம் பாகுபலி திரைப்படத்தை விட பல மடங்கு வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்று தரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.