சினிமாவுக்கு வரும் போது ரூ.60 கோடி இழந்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தான் சட்டென்று ரசிகர்கள் மனதில் இடம் பெறுவார்கள். அந்த வகையில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர். லத்திகா என்ற படம் வெளிவந்ததே அறியாமல் அதன் 100 நாள், 200வது நாள் போஸ்டர்களை பார்த்து யார் இவர் என குழம்பிப் போன ரசிகர்களுக்கு சந்தானம் நடிப்பில் வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படம் திருப்புமுனையாக அமைந்தது. 


தொடர்ந்து பல படங்களில் காமெடி, சிறப்பு தோற்றம் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து வந்த அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் பல கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் நடிகை ஷகீலா, உங்களுக்கு பவர் ஸ்டார் பட்டம் எப்படி வந்தது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு லத்திகா ஆடியோ வெளியீட்டு விழாவில் திருமாளவன் சார் வந்தாரு. அவர் படம் பார்த்துட்டு “பவர் ஸ்டார்” என்ற பட்டத்தை வழங்கினார். அடுத்த நாளில் இருந்து என்  பெயர் சீனிவாசன் இல்லாமல் பவர் ஸ்டார் சீனிவாசனாக மாறியது என கூறினார். 






இதனைத் தொடர்ந்து அவரிடம் சினிமாவுக்கு முந்தைய தொழில்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சென்னை திருமங்கலத்தில் பிரமாண்டமாக லத்திகா என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனை நடத்தி வந்தேன். அப்புறம் நிறைய விஷயத்துல நம்பி ஏமாந்ததால அதை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர், 7,8 ஆபீஸ் நடத்தி வந்தேன். கடைசியில சினிமாவுக்கு வந்த அப்புறம் தான் ஸ்டார் அந்தஸ்து கிடைச்சுது. 


ஆனால் சினிமாவுக்குள்ள வர்றப்ப ரூ.60 கோடி இழந்தேன். இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைக்கு நாளும் சம்பாத்திக்கலாம் என நினைத்தேன். இன்னைக்கு சினிமா தான் என்னை காப்பாத்துச்சு. நான் இழந்த காசு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறது. நான் சினிமாவில் பல அவமானம், கஷ்டம்ல்லாம் பார்த்துட்டேன். இவரெல்லாம் ஒரு நடிகரா, நடிக்கவே தெரியலன்னு சொல்லிருக்காங்க. ஆனால் அதனை எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். 


சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என் பிசினஸ் எல்லாம் நல்லா இருந்துச்சு. ஆனால் கூட இருக்குறவன் எல்லாம் என்னை ஏமாத்திட்டாங்க.என்னோட பிசினஸை ஒவ்வொருத்தருக்கும் பிரிச்சி கொடுத்து பார்க்க சொல்லிட்டு சினிமாவுக்கு போய் நடிக்க போனேன். எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க. பார்த்தேன் மாத சம்பளம் மட்டும் ரூ.35 லட்சம் கொடுத்தேன். நீண்ட யோசனைக்கு எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு இப்ப சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துறேன் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


மேலும் ஏமாற்றம், தோல்வியால் ஒரு காலக்கட்டத்தில் ஏன் உயிரோட இருக்கணும், செத்துரலாம்ன்னு கூட நினைச்சேன். என்னை மாதிரி கஷ்டம்ல்லாம் வேற யாருக்காது இருந்துருந்தா அவர்கள் தற்கொலை பண்ணியிருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் வெளியே சொல்ல நினைச்சா யாரும் நம்பமாட்டாங்க. அதனால் நான் செஞ்ச தர்மம் என்னை காக்குது என பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.