ஹரிஷ் சங்கர் என்பர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் PKPS 28. இது பிரபல நடிகர் பவன் கல்யாணின் 28வது படம் என்பது பலரும் அறிந்ததே. ஏற்கனவே இந்த படம் குறித்த சிறிய அப்டேட்டாக ஒரு போஸ்ட்டரை மித்ரி நிறுவனம் பவன் கல்யாணின் பிறந்தநாள் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பவனின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் First look குறித்து இணையத்தில் பல கேள்விகளை முன்வைத்த நிலையில் தற்போது அதுகுறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 






பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி தான் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலேயே பல திறமைகளோடு திரையுலகில் கால்பதித்தார் பவன் கல்யாண். அரசியலிலும் பவன் கல்யாண் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் நடிகராக, ஸ்டண்ட் கலைஞராக, பாடகராக, தயாரிப்பாளராக மற்றும் டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1996ம் ஆண்டு அக்கட அம்மாயி இக்கட அப்பாயி என்ற படம் தான் இவர் முதல் முதலாக நடிகராக அறிமுகமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள பவன் கல்யாணுக்கு தமிழ் மொழியிலும் ரசிகர்கள் உண்டு.



 


தல அஜித் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு வெர்சனை, வக்கீல் சாப் என்ற தலைப்பில் பவன் கல்யாண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு இந்தப்படம் வெளியானபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பவன் கல்யானை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. பாடகராக, ஸ்டண்ட் கலைஞராக ஒரு தயாரிப்பாளராக கலக்கி வரும் பவன் நலிந்த கலைஞர்களுக்கு தனது உதவியை செய்யவும் மறப்பதில்லை. 


Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!


இந்நிலையில் அவருடைய 28வது படத்தின் First look மற்றும் டைட்டில் லுக் உகாதி திருநாள் அன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலால் அந்த நிகழ்வு தள்ளிவைக்கப்படுகிறது என்றும். ரசிகர்கள் படத்தின் மீது காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் திரைப்படம் குறித்த பல போலியான தகவல்கள் இணையத்தில் வலம்வருகிறது என்றும். PSPK 28 குறித்த எல்லா தகவலும் அதிகாரப்பூர்வமாக தங்களிடம் இருந்தும் படக்குழுவிடம் இருந்தும் வந்தால் மட்டுமே அது உண்மையான தகவல் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் படத்தின் அப்டேட் தள்ளிப்போன நிலையில் அப்சட் ஆகியுள்ளனர் ரசிகர்கள்.