கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ம் தேதி திரையரங்குகளில் களமிறங்குகிறது. விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட்  மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இடையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். 





படத்தின் வெளியீட்டு தேதிக்கான இந்த நேரத்தில், படத்தின் அப்டேட் குறித்து அடுத்தடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திள் இருந்து கமல் எழுதி, பாடிய "பத்தல பத்தல" பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. 

 

இந்தநிலையில், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிளான "போர்கண்ட சிங்கம்" பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடல் தந்தை மகனுக்கும் இடையிலான அன்பை கூறும் பாடலாகவுள்ளது. 

 





 

 போர்கண்ட சிங்கம் பாடலில் வரிகளை கீழே காணலாம் : 

 

உயிரும் நடுங்குதே

உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்

சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே
அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே
மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா
இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா

போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்

உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்..

அழுகாதே மகனே என் ஆயுள் உனதே

இமைப்போல உனைக் காக்க நான் தேய்கிறேன் ஜீவனே..

உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்

போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே..

 

பாடலின் வரிகள் என்னதான் மகனே என்று இருந்தாலும், இது தந்தை மகனுக்கான பாடலா அல்லது தாத்தா பேரனுக்கான உறவு குறித்த பாடலா என்று தெரியவில்லை. இருப்பினும் பாடல் குழந்தைக்காக தன் உயிரை பணயம் வைத்து கமல்ஹாசன் விக்ரம் படத்தில் சண்டையிடலாம் என்று கூறப்படுகிறது. 

 

இந்த போர்கண்ட சிங்கம் பாடலை விஷ்ணு எடவன் எழுத, ரவி ஜி பாடிஇருக்கிறார். பாடலின் பின்னணியில் வழக்கம்போல் அனிருத் தன் இசையால் நம்மை நனைய வைத்துள்ளார்.