Mamathi Chari in Thunivu : துணிவு படத்தில் இணைந்துள்ள புதிய பிரபலம்... டப்பிங் முடிச்சாச்சு... விவரம் உள்ளே
துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் டப்பிங் முடித்துள்ளார் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான மமதி சாரி. இது அவர் துணிவு படத்தில் நடித்ததை உறுதிப்படுத்தியது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்துள்ள திரைப்படம் "துணிவு". இப்படத்தை 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் குறித்த அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகும் நிலையில் தற்போது புதிதாக இணைந்துள்ள மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Just In





நியூ துணிவு அப்டேட் :
துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது டப்பிங் பணிகளை முடித்து வரும் நிலையில் தற்போது ஹெச். வினோத் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான மமதி சாரி. இதன் மூலம் அவர் துணிவு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் மற்றும் மமதி சாரி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
நேருக்கு நேர் மோதும் அஜித் -விஜய் :
பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் நடிகர் அஜித் நடித்துள்ள "துணிவு" திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் தான் இளைய தளபதி விஜய் நடித்துள்ள "வாரிசு" திரைப்படமும் வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களையுமே திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம். கிட்ட தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் பொங்கலுக்கு மோதிக்கொள்ள போவதால் திரை ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.