‘ஏகே 61’படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகியுள்ளார். 

Continues below advertisement


 






நடிகர் அஜித் தற்போது  'ஏகே 61' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் படத்திற்கு இசைமைக்கிறார்.


முன்னதாக நடிகர் அஜித்குமாரின் ‘ நேர் கொண்ட பார்வை’  ‘வலிமை’ உள்ளிட்ட படங்களை போனிகபூர் தயாரித்து இருந்தார். இதில்  ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதனைத்தொடர்ந்து வெளியான ‘வலிமை’ திரைப்படம் தோல்வியை சந்தித்து கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதனால் தற்போது இணைந்திருக்கும் இந்தப்படத்தில் கட்டாயம் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று படக்குழு வேலை செய்து வருகிறது. 


 






முன்னதாக இந்தப்படத்தின் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்த நிலையில்,இடையே பிரேக் எடுத்துக்கொண்ட அவர் ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று 4 தங்கம் 2 வெண்கல பதக்கங்களை வென்றார். அங்கு அவருக்கு அவரது ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர்.