ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. இந்த நிகழ்வில் பெரும்பாலான பாலிவுட் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள்கள், சர்வதேச அளவிலான பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா இந்த நிகழ்வில் இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் இரண்டாவது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது இத்தாலியில் மே 29ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. மொத்த அம்பானி குடும்பமும் இத்தாலியில் காத்திருக்க முன்னணி பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் இந்த நிகழ்விற்கு குடும்பத்துடன் படை எடுத்துள்ளார்கள். சல்மான் கான், ரன்பீர் கபூர், அலியா பட், ஜான்வி கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இத்தாலிக்கு விரைந்துள்ளனர். ஐரோப்பிய க்ருஸ் கப்பலில் நான்கு நாள் பிரமாண்டமாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரியளவில் வெளியாகாத படி இந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. திருமணத்திற்கு முந்தைய நாளில் ஹாலிவுட் பாப் பாடகர்களான ஷகிரா மற்றும் கேடி பெர்ரி உள்ளிட்ட ஸ்டார்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்
15 கோடி ரூபாய் சம்பளம்
இத்தாலியில் தொடங்கிய இந்த திருமணக் கொண்டாட்டம் கடல் வழியாக ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து சென்று பின் இறுதியாக பிரான்ஸ் நாட்டில் கான் செல்ல இருக்கிறது. கான் சென்று 4 கோடி மதிப்புள்ள எஸ்டேட்டில் பார்ட்டி நடைபெற இருக்கிறது. மொத்தம் 800 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கிட்ட 5 மணி நேரம் இந்த கொண்டாட்டம் நடைபெறும் என்று இந்த ஐந்து மணி நேரமும் பாப் பாடகி கேடி பெர்ரி தனது இசை நிக்ழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகப் படுத்த இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் லட்சங்களில் சம்பளம் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது, கடந்த முறை ரிஹானா இசை நிகழ்ச்சி நடந்த்துவதற்காக 90 லட்சம் சம்பளமாக பெற்றார்.
அடுத்தபடியாக பாடகி மற்றும் நடனக் கலைஞரான ஷகிரா இந்த திருமண கொண்டாட்டத்தில் நடன நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொண்டாட்டங்கள் முடிந்த பின் கான் கடற்பரப்பில் நிறுத்தப் பட்டிருக்கும் கப்பல்களில் இருந்து இரவு வான வெடிகள் வெடித்து நிகழ்ச்சியை நிறைவு செய்ய இருக்கிறார்கள் அம்பானி குடும்பத்தினர்