2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என ஏன் சொன்னேன் என நடிகை பூனம் பாண்டே விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 1991ஆம் ஆண்டு பிறந்த பூனம் பாண்டே மாடல் அழகியாக இருந்தார். பேஷன் இதழ் ஒன்று நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்றார். இதில் முதல் ஒன்பது இடங்களுக்குள் தேர்வான அவர் அட்டை படத்தில் இடம் பிடித்தார். இதனால் ரசிகர்களிடம் பிரபலமான பூனம் தனது அரை நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் செல்ல தயார் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். இதற்காகவே காத்திருந்தவர்களை இந்தியா உலகக்கோப்பையை வென்றும் சொன்னபடி நடக்காமல் ஏமாற்றியதால் பலரும் சமூக வலைத்தளங்களில் பூனமை சரமாரியாக விமர்சித்தனர். பூனம் பாண்டே 2013ஆம் ஆண்டில் நிஷா என்ற பாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு தனக்கென தனி இணையதளம் தொடங்கி அதில் தனது நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு தனது காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்ட பூனம், ஒருமாதத்திலேயே அவர் மீது வன்கொடுமை புகாரளித்தார். இப்படியான சூழலில் தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் ஏன் சொன்னேன் என விளக்கமளித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அப்போது எனக்கு 18 வயது இருக்கும். நான் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஏதாவது பெரிய காரியம் செய்வோம் என்று சிலர் சொன்னார்கள். அப்போது தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் கிரிக்கெட் பார்ப்பதையும் பார்த்தேன். எனக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அவ்வளவு ஏன் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் ஏதாவது செய்ய விரும்பினேன். அதனால் இந்தியாவையே அதிரவைக்கும் வகையில் அறிக்கை விடலாம் என நினைத்து அதைத்தான் செய்தேன்.