டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே முதலில் அறிமுகமானது தமிழ் சினிமாவில் தான். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக தான் பூஜா ஹெக்டே  அறிமுகமானார். 


 



இன்றும் அதே இளமை : 


முகமூடி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்பதால் அதன் மூலம் அறிமுகமான பூஜாவின் வாய்ப்புகளும் குறைய   டோலிவுட் பக்கம் காற்று வீச அங்கு பல முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடியவர் பூஜா. 32 வயதை கடந்தும் இன்றும் அதே அழகோடும் இளமையோடு கிளுகிளுப்பாக இருக்கும் பூஜா ஒரே பாடல் மூலம்  உலகமெல்லாம் பிரபலமானவர். அல்லு அர்ஜுன் உடன் "புட்ட போம்மா..." பாடலில் பூஜா போட்ட ஆட்டம் ஒரு பொம்மையை போலவே இருந்தது. மிகவும் ட்ரெண்டிங்காக இருந்த இந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமானார் பூஜா. 


 


மாஸான ரீ என்ட்ரி :


அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து மேஜிக் செய்தார் பூஜா. ‛மலமா பித்தா பித்தாதே ..." பாடல் ஒரு ரைம்ஸ் சொல்லும் குழந்தைகள் கூட முணுமுணுக்கும் அளவிற்கு ஹிட் பாடலாகி விட்டது. 


 






 


சர்ஜரி மேற்கொள்ளும் பூஜா:


சமீபத்தில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்த பூஜா தற்போது காஸ்மெடிக் சர்ஜரிக்காக வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார். பூஜாவிற்கு தனது மூக்கின் ஷேப் மீது திருப்தி இல்லாத காரணத்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வதாக முடிவு எடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த அவரின் ரசிகர்கள் உங்களின் தற்போதைய தோற்றமே மிகவும் அழகாக உள்ளது அதனால் நீங்கள் இது போன்ற காஸ்மெட்டிக் சர்ஜரி எல்லாம் செய்து கொள்ளாதீர்கள் என கேட்டு கொண்டு வருகிறார்கள். 


 






 


உண்மையா? வதந்தியா?


உண்மையிலேயே பூஜா அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாரா அல்லது இவை அனைத்தும் வெறும் வதந்தியா என்று இதுவரையில் எந்த ஒரு தெளிவான தகவலும் வெளியாகவில்லை. பூஜா ஹெக்டே அடுத்தடுத்து ரன்வீர் சிங் நடிக்கும் 'சர்க்கஸ்', சல்மான் கான் நடிக்கும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' மற்றும் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி 28' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.