பொன்னியின் செல்வன் திரைப்படம்:


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல மில்லியன் வியூவ்ஸ்களை கடந்துள்ளது.முன்னதாக வெளியான சோழா சோழா பாடலும், பொன்னி நதி பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்தடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பொன்னி நதி, சோழா சோழா மற்றும் சொல் ஆகிய பாடல்கள் மக்களின் காலர் டியூனாகவே மாறிவிட்டது. 


Also Read|Mani Ratnam: பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வரும்? - ஓபனாக பேசிய மணிரத்னம்!


ப்ரமோஷன் பணிகள்:


பொன்னியின் செல்வன் திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. இதற்காக ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஏற்கனவே இறங்கிவிட்டது. முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களான, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஆதித்ய கரிகாலன், அருண் மொழி வர்மன், குந்தவை என தங்களின் பெயர்களை மாற்றியுள்ளனர். சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. லைனாக, படத்தின் லிரிக்கல் வீடியோ பாடல்களும் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் மேலும் கூட்டி வருகிறது. 


சோழர்களின் பயணம்!




படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக படக்குழு, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அவர்களது ‘ஸ்கெட்யூலில்’ இன்று இடம் பெற்றுள்ள நகரம், கேரளா. நடிகர் கார்த்தி, தனது ட்விட்டர் பதிவில் “ஜர்னி ஆஃப் சோழா பிகன்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.





அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கேரளாவை அடுத்து மற்ற சில நகரங்களிலும் படக்குழு ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.