பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொன்னி நதி பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியன் இளங்கோ கிருஷ்ணன் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 



5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்பாடல் உருவான விதம் குறித்து கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொன்னி நதி பாடலை  மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன். இத்தனை காலமும் எங்கள் நெஞ்சில் சுமந்துகொண்டிருந்தோம்.இது இப்படத்தில் நான் எழுதிய நான்காவது பாடல். ட்யூனாக முதல் முறை கேட்டபோதே மனதில் ஒட்டிக்கொண்டது இந்த, 'பொன்னி நதி' பாடல்.


லயா என்னைவிட விரைவாக அடிக்ட்டாகிவிட்டாள். மீட்டர் செட் செய்ய நான் திரும்ப திரும்ப ட்யூனை ஒலிக்கவிட்டதால், 'ஈகரி எசமாயி... ஈகரி எசமாயி' என வீடு முழுக்கப் பாடித் திரிந்தாள். அந்நாட்கள் அத்தனை இனிமையானவை. இப்போது கேட்டுவிட்டு என்ன வேற என்னமோ பாடறாங்க என்கிறாள். வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... விரைவில் இசை வெளியீட்டில் மற்ற பாடல்களும் வெளிவரும். சங்கம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை நம் மரபின் பல பாடல் மரபுகளை நவீன இசைக்குள் அமர வைக்க முயன்றிருக்கிறோம். இது வரை தமிழ் சினிமா காணாத பல பழந்தமிழ்ச் சொற்கள் பாட்டேறியுள்ளன. கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்திடுங்கள் என தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண