பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement






கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 






5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு,  ஆகஸ்ட் 19 ஆம் தேதி 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது என தொடர்ந்து ரசிகர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலே படக்குழு வைத்துள்ளது. 


நேற்றைய தினம் கூட சோழா சோழா பாடலின் மேக்கிங் வீடியோ, வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிட டென்ட்கொட்டா நிறுவனத்துடன் இணைந்தது என அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் படத்தை வெளியிட்டு #photooftheday என்ற கேப்ஷனோடு அவர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.