Cool Suresh About Ligar Movie : கூல் சுரேஷ் "லைகர்" படம் பார்த்துட்டு ரொம்ப எமோஷனல் ஆயிட்டாராம்...நெட்டிசன்கள் மரண கலாய் 


பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லைகர். விஜய் தேவர்கொண்டா ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். 


பயங்கரமான எதிர்பார்ப்போடு வெளியான படம்:


தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் விருமான் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக வெற்றிநடை போட்டு வரும் சமயத்தில் வெளியான "லைகர்" திரைப்படம் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கான விளம்பரம் பெரிய அளவில் நடைபெற்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும்  சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இன்று ட்ரெண்டிங் விஷயமே "லைகர்" தான்.



ரொம்ப எமோஷனலான கூல் சுரேஷ்:


அந்த வகையில் தற்போது மிகவும் விரலகை வரும் கூல் சுரேஷ் "லைகர் " படம் பற்றிய தனது கருத்தினை திரையரங்கில் இருந்து வெளியே வந்த உடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.


"லைகர்" பற்றி கூல் சுரேஷ் கூறுகையில் "ஏய்... விஜய் தேவர கொண்டா எங்கே இருக்க... ஒவ்வொரு இந்தியனும் நிச்சயமான பார்க்க வேண்டிய படம் லைகர். புலியும்  சிங்கமும் ஒன்று சேர்ந்த பெயர் தான் லைகர் .  படத்தில் விஜய் தேவர்கொண்டாவின் ஒவ்வொரு அடியும் இடி போல விழுகிறது. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப. நீ ஒரு இந்தியனு நிரூபிச்சுட்ட. ஒவ்வொரு இந்தியன், மீசை வைச்சவன் எல்லாரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். அவருக்குள்ள 10 ஜெட்லீ, 20 ஜாக்கிசான் என அனைவரையும் கரைச்சு குடித்த மாதிரி நடித்திருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளினார். இந்த படம் நன்றாக ஓடுதோ இல்லையோ, வசூல் ரீதியாக அல்லுதோ இல்லையோ நிச்சயமாக வரலாற்றில் இந்த படம் இடம்பெறும். இந்த படத்தை பார்த்த பிறகு நம்மால் எல்லாத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும் என்றார்.


நீலாம்பரியை பாராட்டிய கூல்:


மேலும் விஜய் தேவர்கொண்டாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரம்ய கிருஷ்ணன் பற்றி கூறுகையில் " நீலாம்பரி வயசானாலும் உன் அழகும் திறமையும் இன்னும் குறையவேயில்லை. எல்லா இளைஞர்களும் இந்த படத்தை பார்த்து அவரவரின் தாயின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். லைகர் திரைப்படத்தை தமிழில் வெளியிட்டவர் தமிழகத்தின் கருப்பு சல்மான்கான் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். இதுவரையில் அவரின் எத்தனையோ படத்தை பார்த்துளேன். அவை அனைத்தும் மிகவும் செண்டிமெண்ட் மற்றும் எமோஷன்  நினைந்த படங்களாக இருக்கும். அனால் இப்படம் மிகவும் ஸ்டராங்காக இருக்கிறது. விஜயதேவர்கொண்டாவின் நடிப்பு, இசை என அனைத்தும் அருமை. இது போல பல படங்களை எடுக்க வேண்டும்" என கூறினார்.


கருப்பு சல்மான்கான் சொன்ன கருத்து :
 
ஆர்.கே. சுரேஷ் பேசுகையில் "லைகர் படம் முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி படம் மிக அருமையாக இருந்தது. சிறிய வயது முதல் நாம் பார்த்து ரசித்த மைக் டைசன் இப்படத்தில் நடித்திருப்பதை பார்ப்பது மிகவும் எமோஷனலாக இருந்தது. இது ஒரு மாஸ் கமர்சியல் திரைப்படம். நடிகர் விஜய் அஜித் படம் பார்த்த மாதிரி மாஸ்ஸாக இருந்தது. யூத் எல்லாம் மிகவும் என்ஜோய் பண்ணி இந்த படத்தை பாக்குறாங்க" என்றார். 


சிங்கத்திற்கு புலிக்கும் பிறந்தது வேஸ்ட்:


இவர்கள் இருவரும் இப்படத்தை பற்றி இவ்வளவு பில்ட் அப் பாணி சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் ரொம்ப மொக்கையாக இருந்தது என கூறுகிறார்கள் படத்தை பார்த்த ரசிகர்கள். புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்தவன் என்பது ரம்யா கிருஷ்ணனின் கூறும் டைலாக், ஆனால் இவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள். இருப்பினும் விஜய் தேவர்கொண்டா மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு அருமை ஆனால் அதை தவிர படத்தில் வேறு எதுவும் இல்லை என கூறுகிறார்கள் ரசிகர்கள்.