ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம்தான் பொன்னியின் செல்வன் . கல்கி எழுதிய பழம்பெரும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க , கார்த்தி, ஜெயம் ரவி , பார்த்திபன் , விக்ரம் , ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா என இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க  உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர்.




இந்த நிலையில் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா ,புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்திருக்கிறார். பொன்னியின் செல்வன் கதைப்படி, குந்தவையும் நந்தினியும் மிகப்பெரிய எதிரி. அதாவது த்ரிஷாவும் , ஐஸ்வர்யா ராயும்.டிரைலரில் கூட இவர்கள் இருவரும் ஒரே ஃபிரேமில் மோதிக்கொள்ளும் காட்சிகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததல்லவா!. ஆனால் திரைக்கு பின்னால் இருவரும் நட்புடன் பழகினார்களாம்..அது தனது படத்திற்கு இடையூறாக இருக்கும் என மணிரத்தினம் , இருவரையும் பேசிக்கொள்ளக்கூடாது என்றார் என்கிறார் த்ரிஷா.







த்ரிஷா கூறியதாவது :



“ஐஸ்வர்யா ராயை நான் முதல் நாளே சந்தித்து பழக ஆரமித்துவிட்டேன் . அவர் பார்க்க மட்டுமல்ல மனதளவிலும் மிகவும் அழகானவர்.நாங்கள் படத்தை பொருத்தவரையில் ஒருவரை ஒருவர் நேசிக்க கூடாது.ஆனால் நாங்கள் செட்டில் மிகவும் இயல்பாக பழகினோம். இதனை கண்ட மணிரத்தினம் சார் ஒருமுறை எங்களிடம் வந்து , நீங்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் . நீங்கள் பேசிக்கொள்வதை நிறுத்துங்கள் . நண்பர்களாக இருப்பது என் காட்சிக்கு பொருந்தாது என்றார்.  ஐஸ்வர்யா ராய் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவருடன் வேலை செய்வது அத்தனை இனிமையனது.


 






 


அதை அவருடன் வேலை செய்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன். கடுமையாக உழைக்கக்கூடிய நடிகைகளுள் அவரும் ஒருவர். 2 மணிக்கெல்லாம் எங்களோடு அவரும் மேக்கப் போட்டு தயாராகிவிடுவார். அதோடு செந்தமிழை எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசினார். அவருடன் திரையை பகிர்ந்து கொள்வது பெருமையாக இருக்கிறது “ என்றார்.