மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட  பொருட்செலவில்  உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.  இந்த திரைப்படத்தில்  இந்திய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட  படப்பிடிப்புகள் வி்றுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. தற்போது மகாராஸ்டிரா மாநிலம் ஓர்ச்சா பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு , ஷூட்டிங் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் ஆதித்திய கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரம் தனது போஷனை முடித்துக்கொடுத்துள்ளார். இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் , இரண்டிலும் தனக்கான பகுதிகளை விக்ரம் முடித்துக்கொடுத்துள்ளார். சமீபத்தில் விக்ரம் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வாள் பயிற்சி செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. விக்ரமை தவிர அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவியும் இரண்டு பாகத்திற்குமான தனது காட்சிகளை நடித்து முடித்திருந்தார். அது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில்  பிரகாஷ் ராஜ்- சுந்தர சோழர் கதாபாத்திரத்திலும் , பார்த்திபன் - சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும்கார்த்தி - வந்தியத்தேவனாகவும்,விக்ரம் - ஆதித்த கரிகாலனாகவும் , சரத்குமார்- பெரிய பழுவேட்டரையராகவும், ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராய் - நந்தினியாவும் த்ரிஷா -குந்தவையாகவும், ஐஸ்வர்யா லட்சுமி - பூங்குழலி என்ற கதாபாத்திரத்திலும் ,ஜெயராம் - ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற சுவாரஸ்ய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னை , பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பெற்றது. தற்போது கிட்டத்தட்ட 75 சதவிகித படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக தெரிகிறது.




தமிழ் இலக்கிய உலகில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் நாவல்,  பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய இந்த நாவலைத் தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் தொடக்கிப் பல முன்னணி இயக்குநர்கள் படமாக நான், நீ என்று போட்டி போட்டனர். ஆனால் அது கடைசி வரை கனவாக மட்டுமே இருந்தது.   
இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கும் வேலையை இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்தார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை  விரைந்து முடித்து , போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளை தொடங்க உள்ளார்களாம் படக்குழு. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்ய கதைக்களம் கொண்ட பொன்னியின் செல்வன் படம் வருடம் திரைக்கு வர உள்ளது.