பொன்னியின் செல்வன்-பத்திரிக்கையாளர் சந்திப்பு:


தமிழ் திரையுலகில், பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.முன்னதாக வெளியான சோழா சோழா பாடலும், பொன்னி நதி பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்தடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.


படம், செப்டம்பர் 30-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில், இதில், இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் ஜெயம் ரவி,கார்த்தி, பார்த்திபன் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு படக்குழு பதிலளித்தனர். “பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து இடம் பெறாதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இயக்குனர் மனிரத்னம் “வைரமுத்துவுடன் நிறைய பணியாற்றி இருக்கிறோம். திரையுலகிற்குள் நிறைய புது திறமையாளர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது அந்த மாதிரி தான் இதுவும்.. அதில் வேறொன்றுமில்லை விளக்கம் அளித்தார். 






ஜெயம் ரவி-சிம்பு:


பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களிள் ஒருவராக வருகிறார், நடிகர் ஜெயம் ரவி. அருண் மொழி வர்மனாக இப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில், “பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால், ‘நான் நடிக்க மாட்டேன்’ என்று நீங்கள் கூறியதாக கருத்து நிலவி வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிரீர்கள் என்ற ஜெயம் ரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்தார். “சிலம்பரசன் போன் பண்ணி, நான் படத்துல இருக்கேன் தெரிஞ்சா  முதல்ல சந்தோஷ படுறது நீதான். அதனால் தேவையில்லாமல் இவர்கள் சொல்வதை கேட்காதே” என்று கூறினார் என நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்தார்.