பொன்னியின் செல்வன்


பொன்னியின் செல்வன் படத்திற்கு படத்தொகுப்பு செய்வதில் இருந்த சவால்கள் குறித்து ஸ்ரீகர் பிரசாத் மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.


பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகின்றது. எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


ஸ்ரீகர் பிரசாத்


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு படத்தொகுப்பு செய்வதில் இருந்த சவால்கள் குறித்து ஸ்ரீகர் பிரசாத் மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.


அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


இந்தப் படத்திற்காக ஐந்து புத்தகங்களில் இருக்கும் கதையை இரண்டு அத்தியாயங்களாக இயக்குநர் மணிரத்னம் எடுத்துள்ளார். இதுதான் அவருக்கான சவால். அந்த பிரம்மாண்டத்தை அவர் எதிர்பார்க்கும் அளவு கற்பனை கலந்து எங்கு எப்படி தொகுக்க வேண்டுமோ அதை செய்து கொடுப்பது தான் எனது சவால். இதற்காக அவருடன் பல செஷன் அமர்ந்து எதை எங்கே எப்படி தொகுக்க வேண்டும் என்று கலந்தாலோசித்து செய்திருக்கிறேன். அதில் நிறைய சிஜி எஃபக்ட்ஸும் இருக்கிறது. அந்தப் பணி தான் இப்போது நடந்திருக்கிறது.




மலையாளம்


மலையாளத்தில் நான் நிறைய படம் பண்ணக் காரணம், அவர்கள் குறுகிய காலத்தில் படத்தை முடித்துவிடுகின்றனர். 3 மாதங்களில் படம் முடித்துவிடுகின்றனர். மலையாளப் படங்கள் எனக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது. பட்ஜெட் தான் அங்கு லிமிடேஷன். அதற்குள் அவர்கள் படம் எடுப்பார்கள். அந்த உலகத்திற்குள் தான் இன்றும் படம் எடுக்கின்றனர். அவர்கள் சின்ன கதையை ரொம்ப ரியலிஸ்டிக்காக சொல்கிறார்கள்.


ஒரு படத்துக்காக எத்தனையோ ஷாட் எடுத்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை அனைத்தையும் பயன்படுத்தத் தேவையில்லை. எந்த ஷாட்டை எடிட் செய்திருந்தால் நன்றாக வருமோ படத்தின் ஓட்டத்தை என்ஹான்ஸ் செய்யுமோ அதை அறிந்து செய்ய வேண்டும். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் நம் கண் முன்னாள் பெரிய பிரம்மாண்ட சாப்பாட்டு விருந்து இருந்தாலும் நமக்கு பிடித்ததை தானே எடுப்போம், நம்மால் முடிந்ததை தானே உட்கொள்வோம். அப்படித்தான் எடிட்டிங்கும் செலக்டிவாக இருக்க வேண்டும்.


இவ்வாறு ஸ்ரீகர் பிரசாத் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.