பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த், நடிகை த்ரிஷா டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

Continues below advertisement

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்றனர்.  மேலும் நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்ந்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி,  இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.  

இந்நிகழ்ச்சியில் மேடையில் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான படங்களின் பாடல்கள் இடம் பெற்றது. அப்போது ஆய்த எழுத்து படத்தில் இடம் பெற்ற யாக்கைத் திரி பாடலும் பாடப்பட்ட, படத்தில் அப்பாடலில் ஆடிய சித்தார்த், த்ரிஷா ஆகியோர் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை எந்தவித எடிட்டும் செய்யாமல் ஒளிபரப்புமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.