பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவுடன் நடிகர் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
WWE
90ஸ் கிடஸ்களின் மிகப்பெரிய பொழுதுபோக்குகளில் ஒன்று WWE மல்யுத்த போட்டி . ஜான் சீனா, அண்டர்டேக்கர், கேய்ன், ட்ரிபிள் எச், ப்ராக் லெஸ்னர் , ரே மிஸ்டேரியோ என ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தமான வீரர்கள். குறிப்பாக ஜான் சீனாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த ரசிகர் பட்டாளத்தில் நடிகர் காத்தியும் ஒருவர் என்று தெரிய வந்திருக்கிறது .
சமீபத்தில் WWE பிரபலங்கள் ஹைதராபாத்திற்கு வருகைத் தந்தனர். அப்போது அவர்களை வரவேற்க நடிகர் கார்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டிருந்தார். கூடுதலாக அவர்களுடன் விளம்பரம் ஒன்றிலும் கார்த்தி நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் சில நேரம் உரையாடியப் பின் மல்யுத்த வீரர்களுடன் கார்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் ஜான் சீனாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துகொண்டார். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்தியின் பதிவு
புகைப்படத்தை பதிவேற்றி அதனுடன் ஒரு சின்ன பதிவையும் அவர் எழுதியிருந்தார். அதில் “ உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜான் ஸீனா. மிகவும் அன்பாகவும் கணிவாகவும் இருந்ததற்கு நன்றி. ஒரு சில நிமிடங்களில் நீங்கள் எப்படி எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைத்து விடுகிறீர்கள். நீங்கள் எப்போது சொல்லும் HUSTLE , LOYALTY , RESPECT அதை நான் நிஜமாக உணர்ந்தேன்.” என்று கூறியிருந்தார்.
ஜப்பான்
கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இரட்டை வேடங்களில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாள்கிறார்.
வருகின்ற தீபாவளி அன்று ஜப்பான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் திரைப்பத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தெரியவந்துள்ளது.