பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஏப்.17) சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அதில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசியதாவது: ”பொன்னியின் செல்வன் முதல் பாகத்துடன் இடைவேளை விடப்பட்டுவிட்டது. இதில் இருந்தே கதை டென்ஷனாகத்தான் போகும். நிறைய கேள்விகள் இருக்கு இல்லையா... ஆதித்த கரிகாலன் மாதிரியான பெரிய எரிமலை வெடிக்க காத்துட்டு இருக்கு.
நந்தினி நினைச்சத அடைஞ்சே ஆகணும்னு போய்ட்டு இருக்காங்க...அவங்க ரெண்டு பேரும் சந்திப்பதையே ட்ரெய்லர்ல காட்டிட்டாங்க. எல்லா ஹை பாயிண்ட்ஸூம் ட்ரெய்லர்ல இருக்கு. நீங்க என்ன எதிர்பார்க்கறீங்களோ, என்ன எதிர்பார்க்கணுமோ அது அனைத்தையும் ட்ரெய்லர்ல கொண்டு வந்துட்ட்டாங்க. வந்தியத்தேவன் குந்தவைய ஒரே ஒரு தடவை தான் பாத்தான். அதுக்கு அப்பறம் இன்னும் பார்க்கவே இல்லை... திரும்ப கண்டிப்பா சந்திப்பாங்க. இது இல்லாம கதைல நிறைய திருப்புமுனைகள் இருக்கும்.
நமக்கு இன்னும் ஊமைராணி யாரென்று தெரியாது. நந்தினி யாரென்று தெரியாது. நிறைய கேள்விகளுக்கான பதில் படம் முழுதும் இருக்கும். படம் அடிப்படையில் ரொம்ப த்ரில்லிங்கா இருக்குனு எல்லாரும் சொல்லி இருக்காங்க. இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும்” என கார்த்தி தெரிவித்துள்ளார்.
நாங்கள் எதிர்பார்த்தை விட படத்துக்கு வரவேற்பைக் கொடுத்துருக்கிறார்கள். மூன்று தலைமுறை ரசிகர்கள் படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்” என கார்த்தி பேசினார்.
பொன்னியின் செல்வன் ஷூட்டிங் அனுபவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, நான் உதவி இயக்குநராக இருந்தபோது எங்கள் சீனியர்கள் நாங்கள் சரியாக வேலை செய்யவில்லை என தொடர்ந்து சொல்லி வந்தார்கள். நாங்கள் எங்க ஜூனியர்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
ஆனால் இந்தப் படத்தில்தான் முழுமையாக மணி சார் எஞ்சாய் பண்ணார். அவ்வளவு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இந்தப் படத்தை எடுத்தார். த்ரிஷா அவங்கள பாராட்டலனு சொன்னாங்க. ஆனா த்ரிஷாக்கு நிறைய பாராட்ட அள்ளி வழங்கி இருக்காங்கனு நான் சொல்லுவேன். இதெல்லாம் ரொம்ப அதிசயம். அந்தப் படத்துல ஒரு வால் நட்சத்திரம் வருதே. அந்த அளவுக்கு அதிசயம். மணிரத்னம் உண்மையாவே ரொம்ப எஞ்சாய் பண்ணி இந்தப் படத்தை செய்திருக்கார்” எனப் பேசினார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சரத்குமார், ரகுமான், பார்த்திபன், ஷோபிதா, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், கிஷோர் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம் வரு ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.T