PS 2 Box Office Collection: பொன்னியின் செல்வம் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே இரண்டு முறை இந்தப் படத்தை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு கைவிட்ட நிலையில், இறுதியாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க தன் கனவுப் படமான இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார். சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இந்தப் படம் மொத்தம் 500 கோடிகள் வரை வசூலித்து கோலிவுட்டின் மாபெரும் ஹிட் படமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு எனப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுக்க, அடுத்தடுத்த காட்சிகளை பார்த்த மக்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இருப்பினும் படத்திற்கு செய்யப்பட்ட பிரோமோஷன்கள் எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து வருகின்றனர்.
100 கோடிக்கு மேல் வசூல்
இந்நிலையில், தற்போது இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. பொன்னியின் செல்வன் 2 வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், பொன்னியின் செல்வம் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான முதல் நாளில் ரூ.80 கோடியையும், இரண்டாம் நாளில் ரூ.70 கோடியையும் வசூலித்து மாஸ் காட்டியது.
ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் இருந்தாலும், முதல் பாகத்தை ஒப்பிடுகையில் இது குறைவாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகம் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு தலைகிழாக போய்விட்டது. இருப்பினும் முதல் பாகத்தின் வசூலை இந்த இரண்டாம் பாகம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.