செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்தவர் சர்புதீன் (40), இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது



 

சரமாரியாக வெட்டிக்கொலை:

 

இந்நிலையில் இன்று திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் சென்று கொண்டிருந்த காரை  வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அறிவாளால், சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தற்போதைய சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



 

துணிகர சம்பவம்

 

தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக, செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பட்ட பகலிலேயே இது போன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது



பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

 

கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த, வணிக வளாக கட்டிடத்தில் முகப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளில் கொலை சம்பவம் பதிவாகி இருந்தது, இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம், நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என்பது தற்பொழுது, வெளியாகி உள்ள சிசிடிவி கட்சியின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

 

பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், சரபுதீன் தனது காரை இயக்குவதற்காக, காரின் கதவைத் திறந்தவுடன், பின்னால், இருசக்கர வாகனத்தில் ஒரு கும்பல் வருகின்றது. வந்தவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், நேரடியாக சலபுதனையை கண்மூடித்தனமாக கத்தியால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், அந்த கும்பலில் இருந்த இரண்டு மூன்று பேர் , காரின் கதவு மற்றும் முன்புறம் இருந்த கண்ணாடியை உடைத்து அவரை வெளியே தள்ளி மீண்டும் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. சுமார் ஒன்றரை நிமிடத்தில் இந்த சம்பவத்தை அந்த கும்பல் நிறைவேற்றி இருந்தது. இந்த காட்சிகள் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.