Ponniyin Selvan 2 Audio Trailer Launch: ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29ம் தேதி (இன்று) மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.


உலக புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் எடுக்கப்பட்டது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்தது. 


ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைத்துள்ளார். இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகி சுமார் 500 கோடி வசூலைக் குவித்து மாபெரும் வெற்றிபெற்றது. 


தொடர்ந்து இந்த ஆண்டு ஸ்பெஷலாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்ற பாகத்தைப் போலவே பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 


இந்தநிலையில், இயக்குநர் பாரதிராஜா படம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்தார். அதில், “எனக்கு மணியை பார்க்கும் போதெல்லாம் கோபம் வரும். ஏன்னா நான் தான் பிஸ்தா என அலைந்து கொண்டிருந்தேன். பின்னாடி ஒரு சத்தம் கேட்டது. என்னன்னு திரும்பி பார்த்த கேப்ல மணி முன்னாடி போயிட்டார். அவர் ஒரு சிறந்த மனிதர். 


நான் 3-ஆம் வகுப்பு படிக்கும் போது பொன்னியின் செல்வன் படித்தேன். சினிமாவில் எந்த கதையும் எடுத்து விடலாம்..ஆனால் சரித்திர கதையை எந்த வித பிசிரும் இல்லாமல் எடுப்பது கஷ்டம். மணியை என்னுடைய நண்பனாக பெற்றதில் பெருமை கொள்கிறேன். இந்த நாவலை எம்.ஜி.ஆர். க்கு எடுக்கா ஆசை. என்னை, கமல், ஶ்ரீ தேவி ஆகியோரை அழைத்தார். நீ படத்தை எடுக்குற என சொன்னார். கமலை வந்தியத்தேவன் கேரக்டர்ல நடிக்க வைக்கிற என சொன்னார். இந்த விழா நேர்த்தியாக நடைபெறுகிறது. மணி தி கிரேட் மேன். மணி ரத்னத்தினுள் ஒரு ரொமான்டிக் இருக்கு. பொண்ணுங்க கூட லட்டு லட்டா செலக்ட் பண்ணீருக்காரு. எல்லாரையும் காதலிக்கணும் போல இருக்கு. 


லவ் பன்றவன் எல்லாம் நீண்ட ஆயுளுடன் இருப்பான்.. அந்த வகையில் ஐ லவ் மணிரத்னம்.” என தெரிவித்தார்.