PS-2 Audio Launch LIVE : வெளியானது பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Ponniyin Selvan 2 Audio Trailer Launch LIVE Updates : இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே காணலாம்.

தனுஷ்யா Last Updated: 29 Mar 2023 11:34 PM
PS-2 Audio Launch LIVE :இசை மழையில் நனைந்த பார்வையாளர்கள்..விழா மேடையை கலக்கிய ஏ.ஆர் ரஹ்மான்!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் லைவாக பர்ஃபார்ம் செய்து வருகிறார். 



PS-2 Audio Launch LIVE : ‘எம்.ஜி.ஆர் என்னை பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சாென்னார்..’-பாரதிராஜா

பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாரதிராஜா  எம்.ஜி.ஆர் தன்னை அழைத்து பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க சொன்னதாகவும் அதில் வந்தியத்தேவனாக கமல்ஹாசனையும் குந்தவையாக ஸ்ரீதேவியையும் நடிக்க வைக்கச் சொன்னதாகவும் கூறியதாக இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார்.

PS-2 Audio Launch LIVE : ‘எனக்கு பிடித்த மணிரத்னம் படம் இருவர்..’ நடிகர் சிம்பு!

நடிகர் சிம்பு, தனக்கு பிடித்த மணிரத்னமின் படம், ‘இருவர்’ என பொன்னியின் செல்வன்-2 பட விழாவில் பேசியுள்ளார். அப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடிந்திருந்தால் நடித்திருப்பேன் என்றும் கூறினார்.

PS-2 Audio Launch LIVE : ‘எனக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்னம் சாருக்கு நன்றி’ மேடையில் நெகிழ்ந்த சிம்பு!

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு “எனது வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மணிரத்னம் சாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்." என பேசினார். 

PS-2 Audio Launch LIVE : பொன்னியின் செல்வன் -2 படத்தின் அனைத்து பாடல்களும் வெளியீடு!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளன. 


பொன்னியின் செல்வன் 2 பாடல்கள்



  • அகநக

  • வீரா ராஜா வீரா

  • சின்னஞ்சிரு நிலவே

  • ஆழி மழை கண்ணா

  • இளையோர் சூடார்

  • சிவோஹம்


மேற்கண்ட பாடல்கள் யாவும் ஸ்பாடிஃபை தளத்தில் வெளியாகியுள்ளன.

PS-2 Audio Launch LIVE :'‘ஏ.ஆர் ரஹ்மான் கடுமையாக உழைக்கிறார்..’-நடிகர் சிம்பு

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன்,“பத்து தல படத்தை நேற்று நான் பார்த்தேன். ஏ.ஆர் ரஹ்மான் அதில் சிறப்பாக இசை அமைத்துள்ளார். அவர், சிறந்த படைப்புகளை அளிப்பதற்காக கடினமாக உழைக்கிறார்” என்று பேசினார். 

PS-2 Audio Launch LIVE :'சோழர்களுக்கு மட்டுமல்ல..தமிழ் சினிமாவிற்கும் பொற்காலம்'-கமல் ஹாசன்

பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல் ஹாசன், இப்படிப்பட்ட படத்தை இயக்கிவிட்டு மணிரத்னம் அமைதியாக அமர்ந்திருப்பதாகவும், இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் பொற்காலம் என்றும் பேசினார்.

PS-2 Audio Launch LIVE :கையில் வாளுடன் கம்பீரமாக சின்ன பழுவேட்டரையர் மற்றும் பெரிய பழுவேட்டரையர்!

சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபனும், பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள சரத்குமாரும் கம்பீரமாக வாளுடன் போஸ் கொடுத்த காட்சி.


 




 

PS-2 Audio Launch LIVE :பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு மாஸ் எண்ட்ரி கொடுத்த சிம்பு!

நடிகர் சிம்பு, பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மாஸாக வருகை தந்துள்ளார்.



PS-2 Audio Launch LIVE :இரண்டாம் பாகத்தில் சோழர்களை பழிவாங்க காத்திருக்கும் நந்தினி

பொன்னியின் செல்வன் கதையின் வில்லி நந்தினி, சோழர்களை பழிவாங்குவதுதான் இந்த பாகத்தின் கதை.



PS-2 Audio Launch LIVE : பொன்னியின் செல்வன்-2 ட்ரைலருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!

சில நிமிடங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

PS-2 Audio Launch LIVE : பொன்னியின் செல்வன் - 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

 பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளதில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

PS-2 Audio Launch LIVE : வந்தியத்தேவன் எனது தொகுதிக்காரர்... அமைச்சர் துரைமுருகன் கலகல!

எனக்கு வந்தியத்தேவன் கேரக்டர் மேல் பிரியம் அதிகம். காரணம் எனது தொகுதியில் இருக்கும் திருவலம் பகுதி தான் வந்தியத்தேவன் ஊரு. அதனால் எனக்கு பிடிக்கும். இங்க கமல் வந்திருக்காரு. அவருக்கு இணையனாவர் திரையுலகில் இன்றைக்கும் மட்டுமல்ல என்றைக்கும் இல்லை” என அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து பேசினார்.

PS-2 Audio Launch LIVE : கல்லூரி காலத்தில் 5 முறை பொன்னியின் செல்வன் படித்தேன்... அமைச்சர் துரைமுருகன்

விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் ”பொன்னியின் செல்வன் கதையை என்னுடைய கல்லூரி காலத்தில் 5 முறை படித்துள்ளேன்.  படம் வெளியாகி பார்த்தபோது பிரமித்து விட்டேன். மணியால் இப்படி கூட படம் எடுக்க முடியுமா என நினைத்து அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்”  என மகிழ்ச்சி தெரிவித்தார்.

PS-2 Audio Launch LIVE : மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் கமல்ஹாசன்!

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் வருவார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசன் முன்னதாக வருகை தந்தார்.


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கதை வருணனையாளராக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PS-2 Audio Launch LIVE: ’நான் மணிரத்னத்தில் ரியல் லைஃப் ஹீரோயின்’ - சுஹாசினி மகிழ்ச்சி!

இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகை சுஹாசினி, “மணி ரொம்ப ரொமான்டிக். அவரோட ஹீரோயின்ஸ் இவ்வளவு சந்தோசஷமா இருக்காங்கண்ணா நான் ரியல் லைப் ஹீரோயின் எப்படி இருப்பேன் பாருங்க.


அவர்கிட்ட எப்படி இவ்வளவு பெரிய படத்தை கஷ்டப்பட்டு எடுத்துட்டீங்கன்னு கேட்,டா இதெல்லாம் எனக்கு தூசு என சொன்னார். அவரோட படத்திலே எனக்கு பிடிச்சது நாயகன். காரணம் சித்தப்பா (கமல்) நடிச்சதால. அதுக்கு அப்புறம் எனக்கு பிடிச்சது பொன்னியின் செல்வன் தான்” எனப் பேசினார்.

PS-2 Audio Launch LIVE : ’மணி சார் பத்தி பேசுனா எனக்குள் ஹார்ட்டின்கள் பறக்கும்’ - குஷ்பு

இசை வெளியீட்டுக்கு வருகை தந்த குஷ்பு, “நான் மணி சார் பத்தி பேசுனா எனக்குள்ள ஹார்ட்டின் பறக்கும் . அவரோட படத்துல எனக்கு பிடிச்சது மௌன ராகம் படம். பெஸ்ட் பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி( தளபதி). பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமா வரலாறை மாத்திருக்கு. பாகுபலியோட பொன்னியின் செல்வன கம்பேர் பண்ணாதீங்க” எனப் பேசினார்.


 





PS-2 Audio Launch LIVE : தங்கலான் லுக்கில் வருகை தந்த ’ஆதித்த கரிகாலன்’ விக்ரம்!

இசை வெளியீட்டு விழாவுக்கு தங்கலான் பட லுக்கில் மாஸாக வருகை தந்தார் நடிகர் விக்ரம். சோழா சோழா பாடல் பின்னணியில் ஒலிக்க அரங்கம் அதிர விக்ரம் விழாவுக்கு வருகை தந்தார்.

PS-2 Audio Launch LIVE : ’உலகம் முழுவதும் சோழர்கள் பற்றி தெரியவந்துள்ளது’ - எழுத்தாளர் ஜெயமோகன் மகிழ்ச்சி!

முதலில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், “ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. முதல் பாகம் என்பது தொடக்கம் தான். இரண்டாம் பாகம் தான் பெரிய படமா முழுமை பெறுது. முதல் பாக இசை வெளியீட்டு விழாவில் ஒரு விஷயம் சொன்னேன். இந்த படத்துக்கு பிறகு உலகம் முழுவதும் சோழர்கள் பற்றி தெரிய வரும் என்று, அது நடந்துடுச்சு” எனப் பேசியுள்ளார்.

PS-2 Audio Launch LIVE : அமைச்சர் துரை முருகன் வருகை

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரை முருகன் பங்கேற்றுள்ளார்

PS-2 Audio Launch LIVE : தொகுத்து வழங்கும் டிடி மற்றும் பிக்பாஸ் ராஜு

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியை பிக்பாஸ் ராஜு மற்றும் டிடி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்

PS-2 Audio Launch LIVE : தமிழர் இசையுடன் இனிதே தொடங்கிய நிகழ்ச்சி!

பொன்னியின் செல்வனில் நடித்துள்ள ஒவ்வொரு பிரபலங்களும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகை தர தொடங்கியுள்ளார்கள். அத்துடன், நிகழ்ச்சி தமிழர் இசையுடன் இனிதே தொடங்கியது.



PS-2 Audio Launch LIVE : சோழ மணிமுடி இளவரசன் வருகை

பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படும் அருண்மொழிவர்மன் வருகை தந்துள்ளார்.



PS-2 Audio Launch LIVE : வந்துவிட்டார் பூங்குழலி!

பிரமாண்டமாக நடைப்பெற்று வரும் இசைவெளியீட்டு விழாவில் அழ் கடல் அழகி பூங்குழலி பேசிவருகிறார்.




 

PS-2 Audio Launch LIVE : விழாவை சிறப்பிக்க வந்த 80's நாயகிகள்!

குஷ்பு, ரேவதி, ஷோபனா போன்ற 80's முன்னணி நடிகைகள் வந்துள்ளார்கள்.

PS-2 Audio Launch LIVE: பொன்னியின் செல்வன் விழாவிற்கு சின்னப் பழுவேட்டரையர் வருகை!

பொன்னியின் செல்வன் படத்தில் சின்னப் பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன், அப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளார். 


 

PS-2 Audio Launch LIVE: பொன்னியி செல்வன் விழாவிற்கு வருகை தந்த குந்தவை!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, நீல நிற புடவையில் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை.



PS-2 Audio Launch LIVE : பொன்னியின் செல்வன் விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வருகை!

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளார். 

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு விக்ரம் பிரபு வருகை!

நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விக்ரம் பிரபு வருகை.

‘என்னுடன் பணிபுரிந்த இசைக்கலைஞர்களுக்கு நன்றி..’ -ஏ.ஆர். ரஹ்மான்!

 ”பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடன் இரவு பகல் பாராது பணிபுரிந்த இசை கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”-ஏ.ஆர்.ரஹ்மான்

PS-2 Audio Launch LIVE : வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 விழாவின் ஸ்டில்ஸ்

பொன்னியின் செல்வன் 2 விழாவில், பங்குபெற்ற நடிகர்களின் புகைப்படங்கள்..




 






 



Trisha STR : குறுக்க இந்த கௌசிக் வந்தா.. குந்தைக்கு அருகில் வந்த வந்தியத்தேவன்

த்ரிஷாவின் இருக்கைக்கு அருகே, சிம்புவின் இருக்கை இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகிய நிலையில், இருவரின் இருக்கைக்கு நடுவில் கார்த்தியின் இருக்கை உள்ளது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.



PS-2 Audio Launch LIVE : மனதை கொள்ளையடித்த காட்சிக்கு எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!

’அக நக அக நக..’ பாடலின் போஸ்டரில் இடம்பெற்ற காட்சியை காண மக்கள் ஆர்வத்தில் உள்ளனர்.



PS-2 Audio Launch LIVE : மாஸ் என்ட்ரி கொடுத்த் ஆதித்த கரிகாலன்

பொ.செ 2 வின் விழாவிற்கு, ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமும், மதுராந்தகன் கதாபாத்திரத்தில் நடித்த ரஹ்மானும் வருகை தந்துள்ளனர்.

PS-2 Audio Launch LIVE : வருகை தந்த பொன்னியின் செல்வனின் இயக்குநர் மணிரத்தினம்!

இயக்குநர் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி, கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா, பார்த்திபனின் மகள் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

Trisha : த்ரிஷாவின் இன்றைய லுக் எப்படி இருக்கும்?

கடந்த முறை பிங்க் நிற சேலை அணிந்து வந்த த்ரிஷா, இம்முறை என்ன நிறத்தில் ஆடை அணிந்து வருவார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


ட்ரெண்டாகி வரும் அந்த "Poll" : 


Vote which color SQ wears tomorrow for #ps2 trailer launch


Others quote #Trisha @trishtrashers #Southqueen #PonniyinSelvan2 #Ps2trailer


— Queen of South Indian cinema (@girlsrocks_) March 28, 2023




Trisha : "அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி!" - நடிகை திரிஷா

"இந்தப் படத்தைப் பற்றி நான் கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி!" - நடிகை திரிஷா


இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது.


 2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி அதற்கு குறவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது.


இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி என்றார்." என த்ரிஷா, முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விழாவில் பேசினார்.

PS-2 Audio Launch LIVE : அரண்மனை வாயிலாக மாறிய நேரு உள் விளையாட்டு அரங்கம்!

பொ செ 2வின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயு, அரண்மனை வாயில் போல காட்சியளிக்கிறது.



PS-2 Audio Launch LIVE : குந்தவைக்கு அருகில் அமரப்போகும் பத்து தல ராவணன்!

இன்று நடக்கவிருக்கும் பொ.செ 2 நிகழ்ச்சியில், நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். த்ரிஷாவின் இருக்கைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிம்புவின் இருக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.



PS-2 Audio Launch LIVE : எதிர்ப்பார்ப்புகளை எகிறவைக்கும் இரண்டாம் பாகம்

தமிழ் சினிமாவின் பல்லாண்டு கனவை மெய்பித்த மணிரத்தினத்தின் காவியம், கோடிக்கணக்கான வசூலை அள்ளியது. தற்போது, வெளியாகவிருக்கும் இரண்டாம் பாகம் மீது எதிர்ப்பார்ப்புகள் எகிறி வருகிறது.

Jayam Ravi : மணி சாரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம்! - நடிகர் 'ஜெயம்' ரவி

எல்லோரும் நன்றாக பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும் போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை, பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது.


இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை. 


பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.. என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது. மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு  சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதுனானல் வீட்டில் திட்டு வாங்கினேன். அது வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார்.


கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன்.


விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி.” என ஜெயம் ரவி, முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விழாவில் பேசினார்.

PS-2 Audio Launch LIVE : கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா?

கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா.. உண்மையான காரணத்தை காண : ரஜினி கலந்து கொள்ளாதது ஏன்?

PS-2 Audio Launch LIVE : இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கவுள்ள பொ.செவின் பிரமாண்ட விழா

பொன்னியின் செல்வன் 2 வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. 


மேலும் படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PS-2 Audio Launch LIVE : 7 பாடல்களை உள்ளடக்கிய இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகத்தில் 7 பாடல்கள் உள்ளதாக படக்குழு அறிவித்தது. சில நாட்களுக்கு முன்னர், இப்படத்தின் முதல் சிங்கிளான அக நக அக நக பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

PS-2 Audio Launch LIVE : கமலுடன் ரஜினி வருகிறாரா?

முதல் பாகத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், இம்முறையும் இவர்கள் இருவரும் வருகை தருவார்கள் என தகவல் பரவிவருகிறது.

PS-2 Audio Launch LIVE : ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ள பொன்னியின் செல்வனின் ஹாஷ்டாக்!

இன்று நடக்கவிருக்கும் விழாவையொட்டி, இணையவாசிகள் பொன்னியின் செல்வன் ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன், கார் பார்கிங் பாஸ் மற்றும் டிக்கெட்டுகளின் புகைப்படங்களை ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.



PS-2 Audio Launch LIVE : அனல் பறக்கும் பொன்னியின் செல்வனின் விழா மேடை!

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இன்று நடக்கவிருக்கும் விழாவின் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.


 



Background

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் அதுதொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 


பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.500 கோடியை தாண்டிய இப்படம் அந்தாண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர். நாவலை படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் என அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் படமானது எடுக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன்களையும் படக்குழு தொடங்கிய நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது. மாலை 6 மணி தொடங்கும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். 


கடந்த முறை கமலுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். அதேபோல் பத்து தல படம் ரிலீசாகும் நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. 


முன்னதாக சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து “அக நக” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படியான சூழலில் இன்றைய நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்வு நடக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.