Sol Video Song: இணையத்தை ஆக்கிரமித்த த்ரிஷா.. வெளியானது PS 1 ‘சொல்’ பாடல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்த ஆண்டின் சார்ட் பஸ்டராக அமைந்து, ஒவ்வொரு பாடலும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடலான ‘சொல்’ இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் கடந்த செப்டெம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ் சினிமா ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் படம் வெளியான நிலையில், நாவலின் பல ஆண்டு கால ரசிகர்கள், முதியவர்கள், இளம் தலைமுறையினர் என அனைத்து தரப்பினரிமும் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் இந்தியா தாண்டி உலக அளவில் மிக  பிரம்மாண்டமான வெற்றி பெற்று 500 கோடி வசூலை வாரிக்குவித்தது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்த ஆண்டின் சார்ட் பஸ்டராக அமைந்து, ஒவ்வொரு பாடலும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘சொல்’பாடல் உள்பட பல காட்களும் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டன. எனினும் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுமாறு படக்குழுவினரிடம் தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர்.

 

அதன்படி, இன்று சொல் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மேலும். வந்தியத்தேவனும் குந்தவையும் முதன்முதலாக சந்தித்துக் கொள்ளும் காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காட்சியையும் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola