பொன்னியின் செல்வன்:


மாபெரும் பொருட் செலவில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். 5 பாகமாக வெளியான, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களுள் பொன்னியின் செல்வனும் ஒன்று. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான சொல் மற்றும் சோழா சோழா ஆகிய  பாடல்களும், இளைஞர்களின் மனதிலும் ப்ளே-லிஸ்டிலும் இடம் பிடித்து விட்டது. 




சென்னை, கேரளா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என முக்கிய நகரங்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. நேற்று, டெல்லியில் நடந்த கபில் ஷர்மா நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் ரிலீஸிற்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


கேம் ஆஃப் த்ரோன்ஸ்:


2011-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். புகழ் பெற்ற ஹாலிவுட் முகங்களான எமிலியா க்ளார்க், ஜான் ஸ்னோ, டைரன் லான்ஸ்டர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துரந்தனர். ஆட்சியை பிடிக்க மல்லுக்கட்டும் 9 அரச குடும்பங்களை பற்றிய கதைதான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். வரலாற்று கதையாக எடுக்கப்பட்ட இத்தொடருடன் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள கதாப்பாத்திரங்கள் ஒத்துப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. இதனால், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரையும் பொன்னியின் செல்வனையும் ஒப்பிட்டு இயக்குனர் மனிரத்னமிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் நச்சென்று பதில்களை அளித்துள்ளார். 


Also Read:‛ஐஸ்வர்யா ராயாக இருப்பது கடினம்...’ பிரமித்து பேசிய சியான் விக்ரம்!


 


மணிரத்னமின் பதில்:


சமீபத்தில் படம் குறித்து நடந்த நேர்காணலில் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், “தமிழ் சினிமாவின் கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் பொன்னியின் செல்வனா? என கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர், “ஹாலிவுட்டின் பொன்னியின் செல்வன்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸே தவிர, தமிழின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பொன்னியின் செல்வன் கிடையாது” என பதிலளித்துள்ளார்.


 






மேலும், “பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வெளியாவதற்கு முன்னரே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பொன்னியின் செல்வனின் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தால், இந்த படக்குழு மீண்டும் அமையுமா என்று உறுதியாக கூற முடியாது. மேலும், இரண்டு பாகமும் ஒரே கதைதான். 3 மணி நேரம் படத்திற்கு எடுக்க வேண்டிய படப்பிடிப்பை 6 மணி நேர படத்திற்கு எடுத்துள்ளோம்..அப்படி செய்தது அவ்வளவு கஷ்டமாக தெரியவில்லை” என கூறியுள்ளார்.