கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. இப்பாடலில் வந்தியத்தேவனாகிய கார்த்தி பொன்னி நதியை  கடந்து செல்வது போல் சில காட்சிகள் இடம்பெற்றன.


பொன்னியின் செல்வன் புத்தகத்தில், காதல் மன்னன் வந்தியத்தேவன்  தனது குதிரையுடன் பொன்னி நதியை கடந்து செல்வது போலவும் செல்லும் போது ஆடி திருவிழாவை காண்பது போலவும் கதை அமைந்திருக்கும். 


பொன்னியின் செல்வன் நாவலில், வந்தியத்தேவன் ஆடி 18 ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடி பெருக்கு அன்று கதையில் எண்ட்ரி கொடுக்கிறார். சோழ தேசத்தை நோக்கி ஒலையை கொடுக்க செல்லும்போது இந்த காட்சிகள் நடைபெறுவதாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆடி பெருக்கு அன்று நெட்டிசன்கள், வழக்கம் போல் வந்தியத்தேவன் எண்ட்ரி டே வை மீம்ஸ் போட்டு  கொண்டாடினர்.






 


பொன்னி நதி பாடல் வெளியான நாளில் நடிகர் கார்த்தி இப்பாடலை முதல் முறை கேட்கும் போது சோழ நாட்டிற்கு செல்வது போல இருந்தது என ட்வீட் செய்து இருந்தார்.


இப்பாடலில், ஏ.ஆர் ரகுமான் சோழ தேச மெட்டு அமைத்து மீண்டும் அவர் லெஜண்ட் என நிரூபித்துள்ளார். குறிப்பாக 2:55 முதல் 3:05  முதல் அமைந்த இண்டர்லூட் பிரமாதம்...! அதற்கு பின் ஏ.ஆர்.ஆர் வித்தியாசமான டோனில் சோழ சிலைதான் இவளோ என ஆரம்பிக்கும் போது இதுவரை இப்படி ஒரு டோனில் பாடியத்தில்லை என நினைக்க வைத்தது.


பொன்னி நதி, படத்தின் முதல் பாடலாக வெளியானதும், நாவலின் கதைகளம் பொன்னி நதியிலிருந்து துவங்குவதாலும், பொன்னியின் செல்வனின் இண்ட்ரோ சாங்காக இப்பாடல் அமையலாம் என மக்கள் எதிர்பார்கின்றனர்.நேற்று ( ஆகஸ்ட் 4 ) அன்று, பொன்னி நதி பாடல் படப்பிடிப்பு வீடியோ வெளியானது. பொன்னி நதி பாடல் பாடலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டது. இதில் பொன்னி நதி பாடல் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்து நடிகர் கார்த்தியும், டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவும் பேசுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது. மேலும் படத்தில் தன்னுடன் நடிக்கும் குதிரை கூட தன் பேச்சை கேட்கவில்லை என கூறினார்.


அதுமட்டுமில்லாமல் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், நடிகர் கார்த்தியின் படத்தை வைத்து வந்தியத்தேவனே என பேனர் அடித்து உற்சாக மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.மக்கள் வெயிடிங் லே வெறி ஏறுது மாமா என்பது போல் ஆன் ஸ்கிரினில் படத்தை காண காத்திருக்கின்றனர் என்பது கன்ஃபார்மாகிவிட்டது.