Ponniyin Selvan 1 Box Office Day 1: இயக்குநர் மணிரத்னத்தின் மிகப்பெரிய பிரம்மாண்டமான படைப்பு பொன்னியில் செல்வன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு, இந்த ஆண்டு அனைத்து தமிழ் படங்களிலும் வசூலை முறியடித்து சாதனை படத்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் முன்பதிவில் 15 கோடி வசூலித்ததே இந்தாண்டின் சாதனையாக இருந்தது. அதனை தற்போது பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. மேலும், இந்த படம் வெளிநாட்டு முன்பதிவில் சுமார் $1.3. மில்லியன் (10 கோடி) வசூலித்தும் சாதனை படைத்தது. 










இந்த நிலையில், வர்த்தக நிபுணர் மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி,  தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று வெளியான முதல் நாளில் ரூ. 25.86 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றுள்ளது. 


இருப்பினும், இந்தாண்டு தமிழ்நாட்டில் வெளியான நடிகர் அஜித்குமாரின் திரைப்படமான ’வலிமை’ முதல் நாளில் ரூ. 36.17 கோடி வசூலித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நடிகர் விஜயின் ’பீஸ்ட்’ ரூ. 26.40 கோடி வசூலித்து இரண்டாம் இடத்திலும், நேற்று வெளியான பொன்னியின் செல்வன் ரூ. 25.86 கோடி வசூலித்து மூன்றாம் இடத்திலும் உள்ளது. 






அதேபோல் ரமேஷ் பாலா, அமெரிக்காவில் வெளியான ஒரு நாளில் 1 மில்லியன் டாலர் (செப். 29 மற்றும் 30) வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.