நடிகர் விஜய் நடித்துள்ள "The Greatest of All Time" படத்தின் புது போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.






பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் The Greatest of All Time படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்,  என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் அப்டேட்டாக படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு The Greatest Of All Time என பெயரிடப்பட்டிந்தது. 


இதில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். கடந்தாண்டு  விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. மேலும் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். ஹாலிவுட் பாணியிலான மேக்கிங் இந்த படத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தான் போஸ்டரும் வெளியாகி வருகிறது. மேலும் மகன் கேரக்டரில் நடிக்க தாடி, மீசை இல்லாமல் விஜய் இருக்கும் தோற்றத்தில் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். The Greatest of All Time படம் நடப்பு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இதனிடையெ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என நேற்றைய தினம் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.