Powlen Jessica: நடிகை பவுலின் ஜெசிக்கா தற்கொலை வழக்கு.! சிக்குகிறாரா காதலன்..? போலீசார் தீவிர விசாரணை

பவுலினின் கடிதம் மற்றும் செல்போன், குடியிருப்பு சிசிடிவி காட்சிகள்  ஆகியவற்றை கைப்பற்றி கோயம்பேடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

Continues below advertisement

வாய்தா படத்தில் நடித்த நடிகை பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் அவரது காதலனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூ பகுதியைச் சேர்ந்த பவுலின் என்கிற தீபா. அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தனியாக வசித்து வந்த அவர் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்த பவுலின், இயக்குநர் மகிவர்மன் இயக்கிய நாசர், புகழ் மகேந்திரன் நடித்த வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 18) மதியம் அவருக்கு உறவினர்கள் போன் செய்து பார்த்துள்ளனர். பவுலின் போனை எடுக்காத நிலையில் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் பவுலின் சகோதரர் தினேஷ் என்பவருக்கு பிரபாகரன் தகவல் தெரிவித்தார். சென்னைக்கு விரைந்து வந்த அவர் இதுதொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து பவுலின் உடலை கைப்பற்றி  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நேற்று மாலை உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் பவுலினின் கடிதம் மற்றும் செல்போன், குடியிருப்பு சிசிடிவி காட்சிகள்  ஆகியவற்றை கைப்பற்றி கோயம்பேடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காதலனான சிராஜூதின் என்பவரிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்சனையின் உண்மையான காரணம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement