தமிழ்நாட்டில் நாளை ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றன. மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வீடியோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

வாக்குத் தவறாமை...#TNElection2021 #TamilNaduElections2021 pic.twitter.com/8CwPPiAavD
— வைரமுத்து (@Vairamuthu) April 5, 2021

அந்த வகையில், பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ’வாக்குத் தவறாமை’ என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல. அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம். அன்பைக் கொடுக்க சிந்திக்க தேவையில்லை. அதிகாரத்தைக் கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள். சிந்தித்தப்பின் வாக்களிக்கத் தவறாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.