நரேந்திர மோடியின் பிறந்தநாள்:
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று. இவருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்ம உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், அரசியல் பிரமூகர்களும், உலகத் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோலிவுட் நடிகை பூஜா ஹெக்டேவும் மோடிக்கு “ஹேப்பி பர்த்டே மோடி ஜி” என வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பூஜா ஹெக்டே வாழ்த்து!
முகமூடி படம் மூலம் கோலிவுட்டிற்குள் காலடி எடுத்து வைத்வர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் அவர் ஜீவாவிற்கு ஜோடியாக நடத்திருந்தார். அதன் பிறகு, தெலுங்கில் நாக சைத்தன்யா, அல்லு அர்ஜுன், ஜூனியர் என் டி ஆர், சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுடன் நடித்து விட்டார். ஹிந்தியில் கூட ரித்திக் ரோஷன், ரன்வீர் சிங் சல்மான் கான் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்து விட்டார். சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தமிழ் திரையுலகின் முன்னனி நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்தார். இப்படத்திற்கு பிறகு, தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து விட்டார் பூஜா.
இவருக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஃபேன் ஃபாலோயிங் உண்டு. இன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியுட்டுள்ளார் பூஜா.
“ஹேப்பி பர்த்டே மோடி ஜீ..”
மோடியின் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நீங்கள் தொடர்ந்து சிறந்த ஆரோக்கித்தோடு நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை இவரது ரசிகர்கள் ரீ-ட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிற பிரபலங்கள்:
மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல திரையுலக பிரபலங்கள், முக்கியமாக, தென்னிந்திய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அனுபம் கேர், கங்கணா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.