பிரபல நடிகர் துல்கர் சல்மான் தன்னை போன்று இணையத்தில் ஆள்மாறாட்டம் செய்யவேண்டாம் என்று காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் பிரபலங்கள் பலரை போலவே அவர்கள் பெயரில் போலி கணக்குகள் வலம்வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் துல்கர் சல்மான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் கொச்சியில் பள்ளிப்படிப்பை தொடங்கிய இவர், சென்னையிலும் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர் அங்கேயே ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.
அதன் பிறகு தந்தையை போலவே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர் மும்பையில் உள்ள நடிப்பு பள்ளி ஒன்றில் தனது பயிற்சியை முடித்தார். 2012ம் ஆண்டு ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கிய செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் இவர் மலையாள உலகில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நேர்த்தியான தனது நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு 2014ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை முடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
அவெஞ்சர்ஸ் `லோகி'க்கும், சென்னைக்கும் இவ்ளோ நெருக்கமா?
துல்கர் திரையுலகிற்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை வெகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்றபோதும் தமிழில் துல்கருக்கு விசிறிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான் 'வரனே அவசியமுண்டு' என்ற தனது படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகும் மாறினார். இறுதியாக மணியறையிலே அசோகன் என்ற படத்தை தயாரித்த இவர் மேலும் இரண்டு படங்களை தயாரித்து வருகின்றார்.
இறுதியாக தமிழில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் தோன்றினார். மேலும் பிருந்தா மாஸ்டர் இயக்குநராக களமிறங்கும் ஹே சினாமிக்கா என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த ஆண்டு 3க்கும் மேற்பட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளிவர காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது துல்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தனது பெயரில் பல போலி கணக்குகள் இணையத்தில் வலம்வருவதாகவும், தன்னை போன்று இணையத்தில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என்றும் காட்டமான பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.