HBD Udit Narayan : சஹானா சாரல் தூவுதோ! காதுகளுக்கு தேன் பாயும் குரலால் மயக்கும் உதித் நாராயண் டாப் 10 பாடல்கள்!

HBD Udit Narayan: மயக்கும் தனித்துமான குரல் வளம் கொண்ட பின்னணி பாடகர் உதித் நாராயண் குரலில் வெளியான டாப் 10 தமிழ் பாடல்கள்.

Continues below advertisement

பாலிவுட் பின்னணி பாடகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, நேபாளி, போஜ்புரி மற்றும் பல மொழிகளில் பாடக்கூடிய திறமையானவர் பாடகர் உதித் நாராயண். தன்னுடைய அசாத்தியமான மயக்கும் தனித்துமான குரல் வளத்தால் மூன்று தேசிய  விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்த இனிமையான குரலோன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

Continues below advertisement

 


தமிழ் சினிமாவில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் உதித் நாராயண். அதில் டாப் 10 பாடல்களை பற்றி பார்க்கலாம் :

சிவாஜி :

நடிகர் ரஜினிகாந்த் - ஸ்ரேயா சரண் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  வெளியான சிவாஜி படத்தில் இடம் பெற்று இருந்த 'சஹானா சாரல் தூவுதோ..." பாடலால் உதித் நாராயண் - சின்மயி ஸ்ரீபாதா குரலில் தேனில் விழுந்த பழம் போல அத்தனை இனிமையானது. 

Mr . ரோமியோ :

பிரபு தேவா -  சில்பா செட்டி - மதுபாலா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான Mr . ரோமியோ படத்தில் "ரோமியோ ஆட்டம் போட்ட சுத்தும் பூமி சுத்தாதே... "என்ற பெப்பி பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பாடி இருந்தார்.  
 

காதலன் :

பிரபுதேவா - நக்மா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'காதலன்' படத்தில் உதித் நாராயண்- எஸ்.பி. பாலசுப்ரமணியன் இணைந்து பாடிய சூப்பர் ஹிட் பாடலான 'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்...' என்ற பாடலை பாடி அசத்தி இருந்தார். இன்று வரை காதலர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான பாடலாக இது விளங்குகிறது. 

 


ரட்சகன் :

நாகார்ஜுனா - சுஷ்மிதா சென் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'ரட்சகன்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'சோனியா சோனியா...' பாடலை உன்னி கிருஷ்ணன், ஹரிணியுடன்  இணைந்து உதித் நாராயண் பாடிய இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் இன்று வரை பிரபலம். 

முத்து:

சூப்பர் ஸ்டாரின் ஆல் டைம் பேவரைட் திரைப்படமான முத்து படத்தில் இடம்பெற்ற 'குலுவாலிலே முத்து வந்தல்லோ...' பாடலை கே.எஸ்.சித்ரா, கல்யாணி மேனன் உடன் இணைந்து பாடி இருந்தார் உதித் நாராயண். 

மதராசபட்டினம் :

ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான மதராசபட்டினம் திரைப்படத்தில் 'வாம்மா துரையம்மா...' பாடலை கொச்சின் ஹனீபா, எமி ஜாக்சனுடன் இணைந்து உதித் நாராயண் பாடி இருந்தார். 

குருவி :

விஜய் - திரிஷா நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான 'குருவி' படத்தில் 'தேன் தேன் தேன்... உன்னை தேடி அலைந்தேன்...' பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடி இருந்தார் உதித் நாராயண். இப்படம் என்றுமே காதுகளுக்கு இனிமை சேர்க்கும் ஒரு பாடல்.  

யாரடி நீ மோகினி :

தனுஷ் - நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'எங்கேயோ பார்த்த மயக்கம்...' பாடல் மூலம் வருடி சென்றார் உதித் நாராயண். 

கில்லி :

விஜய் - திரிஷா நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான 'கில்லி' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'கொக்கர கொக்கரக்கோ...' பாடலை சுஜாதா மோகனுடன் இணைந்து உதித் நாராயண் பாடி இருந்தார். 

கண்ணெதிரே தோன்றினாள் :

பிரஷாந்த் - சிம்ரன் நடிப்பில் தேவாவின் இசையில் வெளியான 'கண்ணெதிரே தோன்றினாள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஈஸ்வரா... வானும் மண்ணும்...' பாடலை பாடி தெறிக்க விட்டார் உதித் நாராயண். 

Continues below advertisement
Sponsored Links by Taboola