Just In





Singer Kalpana: பெட்ஷீட்டை விளக்கி... இவ்வளவு மோசமாவா நடந்துபீங்க; வெளுத்து வாங்கிய பாடகி கல்பனா!
பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலைக்கு முயற்சித்ததாக வெளியான செய்தி குறித்து அவதூறு பரப்பியவர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள நிசாம்பேட்டை வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்பட்ட பின்னர் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், அவர் ஸ்ட்ரெட்சரில் மயக்க நிலையில் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானது. இது குறித்து கல்பனாவின் மகள் தயா பிரசாத் கூட விளக்கம் கொடுத்திருந்தார். அதாவது, அம்மா தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட நிலையில், அளவுக்கு அதிகமான டோஸ் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தற்போது பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கல்பனா தன்னை பற்றி வெளியான செய்தி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய யூடியூபர்களை கடுமையான சாடினார். எனக்கு என்ன நடந்து என்பது குறித்து வீடியோ வெளியிட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார். நான் எப்போதும் ஊடகங்களுக்கு மதிப்பு கொடுப்பேன். அவர்களில் சிலர் தான் என் மீது சேற்றை அடிக்கிறார்கள். அவர்களால் தான் என் வாழ்க்கையில் பிரச்சனை. அதனை சரி செய்ய நேரம் அதிகம் எடுக்கும்.
உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தெரிந்து சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, ''இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக 8 தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். அப்படியிருந்தும் தூக்கம் வரவில்லை என்பதால் கூடுதலாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். இதனால் சுய நினைவை இழக்கும் நிலை ஏற்பட்டது ஏற்பட்டது என தெரிவித்தார்.
அதே போல் சினிமா காரர்கள் என்றால் மட்டும் ஏன் இவ்வளவு மட்டமா ட்ரீட் பண்றீங்கன்னு தெரியவில்லை. உங்க வீட்டுலையும் அக்கா - தங்கைகள் இருப்பாங்க தானே அவர்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம் இல்ல. உயிர் போற தருவாயில் கூட, போட்டோ எடுக்க பெட்ஷீட்டை விளக்க சொல்லி போட்டோ எடுத்து போடுறீங்க. இதே போல பல விஷயங்கள் இருக்கு. எதையும் யோசிக்காம ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கோம். நாம எந்த மாதிரி சமூகத்துல வாழ்த்துகிட்டு இருக்கும் என ஆதங்களை கொட்டியுள்ளார்.