இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிசாசு’. மிரட்டும் ஹாரர் படங்களுக்கு மத்தியில் காதல் காட்சிகளை புகுத்தி வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்த பிசாசு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் அறிமுக நடிகர்களை வைத்து படத்தை உருவாக்கியிருந்ததால் இயக்குநர் மிஸ்கினை திரைத்துறையினரே பாராட்டினர். இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்திற்கு இசையமைக்கிறார்.இந்நிலையில் படத்தின் முதல் ஆடியோ பாடலை வெளியிட்டுள்ளனர் படக்குழு. “ உச்சந்தலை ரேகையிலே” என தொடங்கும் அந்த பாடலை கபில எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடலை பாடியுள்ளார். மனதை உருக்கும் மெலடியாக இப்பாடல் அமைந்துள்ளது.
பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்கிறார். இவரை தவிர நடிகை பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.. நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியும் கூட பேய் ஓட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. பிசாசு 2 இல் நடிகை ஆண்ட்ரியா ஆடைகள் இன்றி சில சீன்ஸில் நடித்துள்ளாராம். முன்னதாக படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் படங்களை போலவே இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரியும்படி பாத் டப்பின் உள்ளே பெண் ஒருவர் படுத்துக்கொண்டு சிகிரெட் புகைப்பது போல அமைந்திருந்தது, இதன் ஃபஸ்ட்லுக் போஸ்டர்.
பிசாசு முதல் பாகம் எப்படி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததோ அதேபோல பிசாசு இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் இயக்குநர் மிஸ்கின். அதே போல இந்த படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவிற்கு தேசிய விருதுகள் கூட கிடைக்கும் என தெரிவித்துள்ளார். படம் எப்போதோ தயாராகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட படங்களுள் பிசாசு இரண்டாம் பாகமும் ஒன்று. பிசாசு 2 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.