பிச்சைக்காரன் திரைப்படம், சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 19 -ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் இத்திரைப்படம் தெலுங்கிலும் வெளியானது. அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 


பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கினார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, இந்த படத்திற்கு இசையும் அமைத்திருந்தார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அவரின் மனைவி யாசகர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தனர். திருப்பதிக்குச் சென்று அங்குள்ள யாசகர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை  வழங்கிய விஜய் ஆண்டனி, அடுத்து, ஆந்திராவின் ராஜமுந்திரியில் சாலையோரம் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை, ஸ்டார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவர் கையாலே பரிமாறி விருந்து வழங்கினார். 


இந்த நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 18- ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிச்சரிக்காரன் 2 வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன், அதற்கான போஸ்டரை பகிர்ந்துள்ளது. நடிகர் விஜய் ஆண்டனியும் அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  
 


மேலும் படிக்க 


Asia Cup 2023 Date: ஹைப்ரிட் மாடலில் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர்.. 13 போட்டிகள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Biparjoy Cyclone: இன்று கரையை கடக்கும் அதி தீவிர பிபர்ஜாய் புயல்.. மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?