கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நின்று போஸ் கொடுக்கும் சமந்தாவின் பதிவை ரசிகர்கள் சூழ்ந்தனர். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா(Samantha). தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடித்துள்ளனர். அதோடு, சாகுந்தலம், யசோதா ஆகிய தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில், ’ஊ அண்டாவா’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.



தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. இதற்கிடையே அவர் கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.






இந்நிலையில் அவர் சமீப காலமாகவே ஃப்ரீயாக இருக்க கிடைக்கும் நேரங்களை எல்லாம் சுற்றுலா செல்ல பயன்படுத்துகிறார். பெரும்பாலும் அமைதியான இடங்களுக்கு, கோயிலுக்கு, இயற்கையான இடங்களுக்கு செல்கிறார். அந்த வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சமந்தா விசிட் அடித்துள்ளார். அதில் ஒரு மலைக்குன்றின் மேல் நின்று சமந்தா தந்த போஸ்தான் தற்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. சிகப்பு நிற உடையில் சமந்தா தந்த போஸுக்கு 18 லட்சம் லைக்ஸை தாண்டி ரசிகர்கள் சிதறவிட்டு வருகிறார்கள்.


Also Read: Rajinikanth Thalaivar 170: நெருப்புடா... அருண்ராஜா காமராஜுடன் இணையும் சூப்பர்ஸ்டார்.. வலிமைக்கு பின் கால்பதிக்கும் போனி கபூர்.. சூப்பர் அப்டேட்ஸ்