உலகெங்கிலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரானின் பரவலால் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், புதுவிதமாக திருமண நிகழ்வுகளை நடத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், வாலிபன் ஒருவர் யார் வீட்டு திருமணத்திற்கு சென்று எந்தவொரு செலவும் இல்லாமல் ஒரு ஜான் கையிறை கொண்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் திருமணம் என்றவுடன் இரு வீட்டார் சம்மத்துடன் நிச்சயம் செய்து நல்லநாள் குறித்து சொந்தம், பந்தம், உற்றார், உறவினர் என அனைவரும் முன் நிற்பர். ஐயர் தாலி எடுத்து கொடுத்து கட்டிமேளம்..கட்டிமேளம்.. என்ற குரல் எழுப்பிய அடுத்த நொடி மணமகன் கையில் இருக்கும் தாலி மணமகளின் கழுத்தில் தஞ்சம் அடையும்.
இப்படி காலம் காலமாக ஒருபுறம் திருமணம் அரங்கேறி வந்தாலும், காதல் திருமணம் தனக்கு பிடித்தவர்களுடன் தனக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையில் நடைபெறும். இப்படிப்பட்ட திருமணத்தையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ படு வைரலாகி வருகிறது. அதில், யாரோ ஒருவர் வீட்டு திருமணத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக ஒரு பெண் அமர்ந்துகொண்டு இருக்கும் இருக்கைக்கு பின்னால் நிற்கிறார்.
சரியாக சிறிது நேரத்தில் கட்டிமேளம் சத்தம் முழங்கும் நேரத்தில் அந்த வாலிபர் தனது சட்டை பையில் இருக்கும் தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் கட்டி விடுகிறான். இதைபார்த்து அருகில் இருந்த ஒரு தம்பதியினரும் அதை தடுக்காமல் சிரித்து கொண்டு இருக்கின்றனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. யார் அந்த நபர்..? அந்த பெண்ணின் விருப்பத்தின் படிதான் இந்த திருமணம் நடைபெற்றதா என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மேலும், இந்த வீடியோவை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் அடப்பாவி என்ன வேலை பார்த்துட்ட, சத்தியமா இந்த வேலையை பார்க்க எந்தவொரு 90ஸ் கிட்ஸ்க்கும் தைரியம் இருக்காது.நீ 2k கிட்ஸா தான் இருப்பா என்று அந்த வீடியோ கீழ் கமென்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்