தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக கருதப்படும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும்தான் தற்போது அதிகம் கவனிக்கப்படும் ஜோடியாக உள்ளனர். இருவரும் தங்களது நேரங்களை நண்பர்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் செலவிடுகின்றனர். இது குறித்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனது நண்பர்களுடன் நேற்று இரவு உணவு சாப்பிட சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். அதற்கு கேப்ஷனாக ”செவ்வாய் கிழமை இரவு , சரியான நபர்களுடன் போச்சு“ என குறிப்பிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.அவ்வபோது இவர்கள் பதிவிடும் ட்வின்னிங் மற்றும் couple goals புகைப்படங்களுக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அவ்வப்போது ஏதாவது ஒரு நாட்டிற்கு பறந்துவிடும் , இந்த ஜோடிகள் ஒரு நீண்ட வெக்கேஷனுக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பியிருக்கின்றனர். நயன்தாரா , விக்னேஷ்சிவன் திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியிருப்பது நாம் அறிந்ததுதான். இந்த திருமணத்தை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார். இது குறித்து பகிர்ந்த அவர், “இது ஒரு திருமண படம் அல்ல. இது லேடி சூப்பர் ஸ்டாரின் படம்“ என தெரிவித்திருந்தார்.
"நயன்தாரா: பியோண்ட் தி ஃபெய்ரிடேல்” என்ற பெயரில் வெளியாகும் ஆவணப்படத்தில் , நயன்தாராவின் சிறுவயது பருவம் எப்படி இருந்தது? அவர் எப்படி சினிமா துறையில் பயணித்தார்? அவருக்கு பிடித்த விஷயம் என்ன? குழந்தை பருவ புகைப்படங்கள் , எதற்காக லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுகிறார் என முழுக்க முழுக்க நயன்தாராவை பற்றிய ஆவணப்படமாக இது இருக்கும் என்றார் கௌதம் வாசுதேவ் மேனன். மேலும் பேசிய அவர் “நான் முதலில் திருமணத்தை இயக்க இருப்பதாக எல்லோரும் கூறினார்கள். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் என்னிடம் நயன்தாராவின் ஆவணப்படத்தை இயக்கத்தான் அணுகினார்கள் . இந்த ஆவணப்படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு அங்கம் மட்டும்தான். ஆவணப்படத்திற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது“ என்றார் ஜி.வி.எம்.
நயன்தாரா தற்போது ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்திலும் தெலுங்க் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் கோல்ட் திரைப்படத்தில் பிரித்திவிராஜுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன். விக்னேஷ் சிவன் அஜித் குமாரின் , 62 வயது படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏகே61 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியவுடன் இது குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டை எதிர்பார்க்கலாம்