தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகைகள் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தனுஷ் - சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் இணைந்துள்ளது. ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







இந்த நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிரார்.கருப்பு நிற கூலர்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து சூரியனுக்கு எதிராக நின்று திரும்பி பார்க்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் தாடியுடன் , தலையில் நீளமான முடியுடன் கெத்தாக தோற்றமளிக்கிறார் தனுஷ். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக “ கேப்டன் மில்லர் “ என குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ். தனுஷின் கேப்டன் மில்லர் தோற்றம் இதுதானா என ரசிகர்கள் கமெண்ஸ்களில் ஃபயர் விட்டு வருகின்றனர்.




தனுஷ் எப்போதுமே தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்காக அதிக மெனக்கெடல்களை செய்து வருகிறார். டயலாக் மாடுலேஷன் மற்றும் நடிப்பில், வித்தியாசங்களை புகுத்தினாலும் கூட தோற்றமும் கதாபாத்திரங்கள் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அவர் அதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. நீளமான மற்றும் அதிக தாடியுடன் அட்ராக்ட்டிவ் லுக்குடன் வரும் மில்லர் தனுஷை ரசிகர்கள் திரையில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கேப்டன் மில்லர் திரைப்படம் 1930  களின் இந்தியாவை பிரதிபலிக்கும் என தெரிகிறது. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அதே நேரம் படத்தில் டார்க் ஹூமரும் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நாயகியாக பிரியங்கா மோகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.